11% நம்பர் பேசுது.. ஸ்டாலின் வைத்த கணக்கு! 2030-க்குள் தமிழகத்தில் மாற்றம்.. டிஆர்பி ராஜா மகிழ்ச்சி
சென்னை: தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அபரிமிதமான மாற்றத்தை அடைந்துள்ளதாக அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார்.. மற்ற மாநிலங்கள் அரசியலில் கவனம் செலுத்தி வரும் வேளையில், தமிழகம் தனது பொருளாதாரச் செழிப்பைப் பெருக்குவதில் மட்டுமே குறியாக இருப்பதாகவும், 'திராவிட மாடல்' என்பது வெறும் வார்த்தையல்ல, அது செயல்வடிவம் என்பதை இந்த 11 சதவீதத்தை நெருங்கும் வளர்ச்சி விகிதம் உரக்கச் சொல்வதாகவும் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளது மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது..
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்த மத்திய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீடுகள் வெளியாகியுள்ள நிலையில், மாநிலம் தொடர்ந்து 2வது ஆண்டாக இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்து புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது.

கடந்த 2024-25 நிதியாண்டில் 11.19 சதவீத வளர்ச்சியை எட்டியிருந்த தமிழகம், தற்போது 2025-26 நிதியாண்டிலும் 10.83 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து, தேசிய சராசரியான 7.4 சதவீதத்தை விட வெகுதூரம் முன்னிலையில் உள்ளது. இந்த அபாரமான வளர்ச்சியைத் தனது 'எக்ஸ்' (X) தளத்தில் பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி
"திராவிட மாடல் அரசு வெறும் கோஷங்களால் ஆனது அல்ல, அது எண்களால் நிரூபிக்கப்பட்ட உண்மை" என்று பதிவிட்டுள்ளார். மேலும், 3 ஆண்டுகளில் கட்டமைக்கப்பட்ட வலுவான அடித்தளமே இந்தத் தொடர் வளர்ச்சிக்குக் காரணம் என்றும், இது தெற்காசியாவிலேயே தமிழகத்தைத் முதன்மையான சக்தியாக மாற்றும் பயணத்தின் ஆரம்பம் மட்டுமே என்றும் அவர் உற்சாகத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வியக்கத்தக்க வளர்ச்சி குறித்து தமிழகத் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமகிழ்ச்சியுடன் ஒரு பதிவை போட்டுள்ளார்..
திராவிட_மாடல் ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளது, திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்களின் அரவணைப்பில் வளரும் நம் தமிழ்நாடு !
இது சாதாரண வளர்ச்சி அல்ல
இது சாதாரண வளர்ச்சி அல்ல, திட்டமிட்ட முன்னேற்றம் என்பதையே இது நிரூபிக்கிறது.. இதுவே அனைவரையும் உள்ளடக்கிய பரவலாக்கப்பட்ட திராவிட மாடல் வளர்ச்சி.. இதில் முக்கிய தகவல் என்னவென்றால், இந்திய அளவில் இது அதிகம் என்பதைக் கடந்து, ஏற்கனவே உயர்ந்து இருக்கும் ஒரு மாநிலம் இவ்வளவு வேகத்தில் வளர்வது உலக அளவிலும் அரிது !
இது சாதாரணமாக கிடைத்த வளர்ச்சி அல்ல. இந்திய அரசியல்.. உழைப்பு உழைப்பு உழைப்பு மிகக் கடின உழைப்பினால் கிடைத்த வெற்றி... திமுக ஆட்சியின் முந்தைய காலங்களிலும் இதேபோன்ற வலுவான வளர்ச்சி பதிவாகியுள்ளது.
டிஆர்பி ராஜா ஹேப்பி
தொடர்ந்து 15-20 ஆண்டுகள் இப்படியான வளர்ச்சி நடந்தால், சீனா, தென் கொரியா போன்ற வளர்ச்சி இங்கேயும் நிச்சயம் சாத்தியம் தான் !.. 2030க்குள் தமிழ்நாட்டை $1 டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை உறுதியாக தனது கையில் எடுத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இந்த வளர்ச்சி அடுத்த 5 ஆண்டுகளும் தொடரும்.,, இந்த பாதையை வலுப்படுத்தி, முதலீடு, தொழில், வேலைவாய்ப்பு வளர்ச்சியை முன்னெடுத்து வரும் மாண்புமிகு திராவிட நாயகன் அவர்களின் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி இது .. தமிழ்நாடு வளர்கிறது.ஆட்சி செய்தி.. தமிழ்நாடு வழிகாட்டுகிறது.. தமிழ்நாடு தொடர்ந்து வெல்லும்" என பதிவிட்டுள்ளார்.
11 சதவீதம் நெருங்கும் வளர்ச்சி
மற்ற மாநிலங்கள் அரசியலில் கவனம் செலுத்தி வரும் வேளையில், தமிழகம் தனது பொருளாதாரச் செழிப்பைப் பெருக்குவதில் மட்டுமே குறியாக இருப்பதாகவும், 'திராவிட மாடல்' என்பது வெறும் வார்த்தையல்ல, அது செயல்வடிவம் என்பதை இந்த 11 சதவீதத்தை நெருங்கும் வளர்ச்சி விகிதம் உரக்கச் சொல்வதாகவும் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளது மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது..
2030-க்குள் தமிழகத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை நோக்கி மாநிலம் தற்போது அதிவேகமாகப் பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது.














Click it and Unblock the Notifications