சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிப்ரவரி 25ல் மதிமுக உயர்நிலைக் குழுக்கூட்டம் நடைபெறும்... வைகோ அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை:மதிமுகவின் உயர்நிலைக் குழுக்கூட்டம் பிப்ரவரி 25ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் சூடுபிடித்து வருகின்றன. 2 பெரிய கட்சிகளான திமுக, அதிமுக இடையே கூட்டணி அமைப்பதில் பெரும் போட்டி நிலவி வருகிறது.

Mdmk announced that the high command meeting of its party will be held on february 25

ஏற்கெனவே திமுகவில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக என கட்சிகள் இருந்தாலும் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட மற்ற பணிகளில் பின்தங்கியே உள்ளனர். ஆனால்... இந்த விஷயத்தில் வழக்கம்போல் அதிமுக முன்னேற்றம் கண்டுள்ளது.

அதிமுக கூட்டணி எப்படி இருக்கும் என்கிற சந்தேகம் இருந்து வந்த நிலையில் பாஜக,அதிமுக கூட்டணி உறுதியானது. அதிமுகவையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வந்த பாமக திடீரென அதிமுக கூட்டணியில் இணைந்து பாஜகவை விட கூடுதலாக 2 இடங்களை பெற்றது.

பாஜகவால் 5 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனிடையே அதிமுக கூட்டணியில் தேமுதிகவும் இணையும் என சுதீஷே கூறிய நிலையில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. அதற்கு முக்கியக் காரணம் விஜயகாந்தின் பிடிவாதம்தான் காரணம் என்று தேமுதிக வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

அதேநேரத்தில் திமுகவுடம் தமது கூட்டணி பேச்சுவார்த்தையை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது. காங்கிரஸ், திமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டது. 10 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது.

அந்த கூட்டணியில் இனி அடுத்து இடம் பெற வேண்டிய கட்சிகள் எவை என்ற ஆலோசனைகள் தொடங்கி விட்டன. அதன் ஒரு பகுதியாக, மதிமுக தமது ஆலோசனையை துவக்கி உள்ளது. அதற்காக வரும் 25ம் தேதி அக்கட்சி உயர்நிலைக் குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. அந்த கூட்டத்தில் அனைத்து விஷயங்களும் இறுதி செய்யப்பட்டுவிடும் என்று தெரிகிறது.

English summary
Vaiko, the general secretary of the MDMK has announced that the high command meeting of his party will be held on February 25.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X