சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மருத்துவக் கழிவுகளால் குப்பை காடான போரூர் ஏரி .. நேரடியாக ஆக்சனில் இறங்கிய மா.சுப்பிரமணியன்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை போரூர் ஏரியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து அந்த ஏரியில் ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிமணியன், குப்பைகளை யார் கொட்டினாலும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

Recommended Video

    மருத்துவக் கழிவுகளால் குப்பை காடான போரூர் ஏரி .. நேரடியாக ஆக்சனில் இறங்கிய மா.சுப்பிரமணியன்!

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய முக்கிய ஏரிகளுள் ஒன்றான போரூர் ஏரிக்கு ஐயப்பன்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகள் இந்த பகுதியில் கொட்டப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன.

    இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன், மதுரவாயல் எம்.எல்.ஏ.கணபதி ஆகியோர் குப்பைகள் கொட்டப்பட்டு வரும் இடங்களில் நேரில் சென்று அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    டேனிஷ் சித்திக் மரணத்திற்கு நாங்கள் காரணமல்ல.. மறுப்பு தெரிவித்து.. இரங்கல் வெளியிட்ட தாலிபான்கள் டேனிஷ் சித்திக் மரணத்திற்கு நாங்கள் காரணமல்ல.. மறுப்பு தெரிவித்து.. இரங்கல் வெளியிட்ட தாலிபான்கள்

     காம்பவுண்ட்

    காம்பவுண்ட்

    போரூர் ஏரிக்கு சொந்தமான இடங்களை ஆய்வு செய்து காம்பவுண்ட் அமைக்க வேண்டும் குப்பைகள் கொட்டாத வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் அதற்கான நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    குப்பை கொட்டப்படுகிறது

    குப்பை கொட்டப்படுகிறது

    பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது : போரூர் ஏரி மொத்தம் 252 ஏக்கர் அரை ஏக்கர் அளவிற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது மீதமுள்ள 200 ஏக்கர் குப்பை கொட்டும் இடமாகவும் மரம் செடிகள் வளர்ந்து இடமாகவும் மாறி உள்ளது

    குடிநீர் பயன்பாடு

    குடிநீர் பயன்பாடு

    அனைத்து துறைகளையும் சேர்த்து இங்கு உள்ள மரம் செடி கொடிகள் முற்றிலுமாக அகற்றப்பட்டு முழுமையாக காம்பவுண்டு சுவர் அமைக்கப்படும். போரூர் ஏரியில் வெளி வாகனங்களிலிருந்து குப்பைகள் கொட்டுவதை தடுப்பதற்கு காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். போரூர் ஏரி முழுமையாக பாதுகாக்கப்படும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படும்

    அமைச்சர் மா சுப்பிரமணியன்

    அமைச்சர் மா சுப்பிரமணியன்

    குப்பைகளை யார் கொட்டினாலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் . கடந்த 10 ஆண்டுகளாக ஏரி பராமரிக்கப்படாமல் மண் கொட்டி மூடி தனி நபர் நன்மை அடையும் வகையில் முயற்சிக்கப்பட்டது. அப்போது திமுக மற்றும் பல்வேறு அமைப்புகளின் போராட்டங்கள் மீட்கப்பட்டது " என தெரிவித்தார்.

    English summary
    Following a complaint that medical waste was being dumped in Porur Lake in Chennai, Health Minister Ma Subbimanian, who inspected the lake, warned that stern action would be taken against anyone who dumped garbage.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X