சிகிச்சை அறையில் நடந்த கூட்டம்.. ஜெயலலிதா கொடுத்த "குறிப்பு" - டெல்லி பறந்த ஈபிஎஸ் - நடந்தது என்ன?
சென்னை: ஜெயலலிதா மரணத்தின் பின்னணியில் இருக்கும் மரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில், ஜெயலலிதாவின் சிகிச்சை அறையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் அளித்த குறிப்புகளோடு எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதில், சசிகலா வெளியேற்றப்பட்டு, 2012 ஆம் ஆண்டில் மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்ததிலிருந்து அவர்கள் இருவருக்கும் இடையே சுமுக உறவு இல்லை என்றும், சசிகலாவைக் குற்றம்சாட்டுவதைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் 5 ஆம் தேதி இரவு 11.30 என மருத்துவமனை அறிவித்த நிலையில், அவர் இறந்த நேரம் 2016 டிசம்பர் 4 ஆம் தேதி மதியம் 3 மணி முதல் 3.50-க்குள் இருக்கும் என்று கூறியுள்ள ஆறுமுகசாமி ஆணையம் பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளது.

காவிரி நதிநீர் கூட்டம்
ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில், ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றி விவரிக்கப்பட்டு உள்ளது. அதில், "உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நதிநீர் விவகாரத்தில் மாநில முதல்வர்கள் முடிவெடுக்க வேண்டும் என அரசு அதிகாரி ஷீலா பாலகிருஷ்ணன் கூறினார்.

மருத்துவமனையில் கூட்டம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால், அவரது கருத்துக்கள் அறிக்கையாக அளிக்க முடிவு செய்யப்பட்டு 27.10.2016 அன்று மாலை 04:30 மணிக்கு அவர் சிகிச்சை பெறும் அறையிலேயே கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டது.

ஜெயலலிதா கொடுத்த குறிப்பு
அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த போதிலும் அவரால் கூறப்பட்டு அறிக்கை செயலாளர்களால் குறிப்பெடுக்கப்பட்டு, திருந்தங்களுக்குப் பின்னர் அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்ட வழிமுறைகளின்படி டெல்லியில் நடந்த முதலமைச்சர்கள் கூட்டத்தில் தலைமைச் செயலாளரால் படிக்கப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு மாண்புமிகு உச்சநீதிமன்றத்துக்கும் தெரிவிக்கப்பட்டது.

சிகிச்சை அறையில்
காவிரி பிரச்சினை குறித்த ஆலோசனைக் கூட்டம் சிகிச்சை அறையிலேயே நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், K.N.வெங்கடராமன், அப்போதைய தலைமைச் செயலாளர், ராமலிங்கம் மற்றும் தலைமை வழக்கறிஞர் திரு R முத்துக்குமாரசுவாமி ஆகியோர் காவிரி பிரச்சினை குறித்த கூட்டத்தில் பங்கேற்றனர் என்று ஷீலா பாலகிருஷ்ணன் கூறினார்.

எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சரால் தயாரிக்கப்பட்ட உரையை அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சரான எடப்பாடி K பழனிசாமி முன்னிலையில் டெல்லியில் நடந்த நீர்வளத்துறை கூட்டத்தில் முன்னாள் தலைமை செயலாளர் படித்தார். மறைந்த முதல்வர் அளித்த குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு அந்த உரை தயாரிக்கப்பட்டது.
-
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
கொக்கு போல் காத்திருந்த எடப்பாடி.. சீனியர்களை சின்னாபின்னாம்மாக்கி மாஸ்! இப்படி ஒரு ப்ளானா? சூப்பர்! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
சென்னை சிறுவனுக்கு பாலியல் தொல்லை! கோட் சூட் போட்டோஷூட் நடத்தினால் மட்டும் போதாது! இபிஎஸ் அட்வைஸ் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications