சென்னையில் நள்ளிரவில் பெய்த மழையால் தணிந்த வெப்பம் - சில்லென்று மாறிய வானிலை
சென்னை மாநகர், புறநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் பரவலாக மழை பெய்தது.வெப்பம் தணிந்து குளுமையான காற்று வீசி வருகிறது.
சென்னை: கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் சுட்டெரித்த நிலையில் நள்ளிரவு முதல் இடியுடன் கூடிய மழை பெய்தது. 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. வெப்பம் தணிந்து குளுமையான காற்று வீசி வருகிறது.
Recommended Video
சென்னை வானிலை மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணித்திருந்தது.
கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகள், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நள்ளிரவில் மழை
வானிலை மையம் அறிவித்தது போல சென்னை மாநகர் புறநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் பரவலாக மழை பெய்தது. சென்னை தியாகராய நகர், கிண்டி ,மீனம்பாக்கம் ,தாம்பரம், வேளச்சேரி பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

கொட்டித்தீர்த்த மழை
அதே போல கேகே நகர் ,ராமாபுரம், வளசரவாக்கம் ,போரூர் ,வடபழனி ,கோயம்பேடு ,அம்பத்தூர், அண்ணா நகர், கொளத்தூர், மாதவரம் ,வில்லிவாக்கம் ,சோழிங்கநல்லூர், பூந்தமல்லி பகுதிகளில் கனமழை பெய்தது.

தேங்கிய மழை
நள்ளிரவு தொடங்கிய மழை 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. விடாமல் பெய்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியது. கடந்த 2 நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில் கொட்டித்தீர்த்த மழையால் வெப்பம் தணிந்து அதிகாலை நேரத்தில் குளிர் காற்று வீசியது.

மழையை எதிர்பார்க்கலாம்
28ஆம் தேதி கடலோர மாவட்டங்கள், மற்றும் சென்னை, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளதால் சென்னையில் இன்றும் மழையை எதிர்பார்க்கலாம்.
-
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications