அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. சென்னை மருத்துவமனையில் அனுமதி.. என்னாச்சு?
சென்னை: திமுகவின் மூத்த தலைவரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளி்க்கப்பட்டு வரும் நிலையில் அவரது உடல்நல பிரச்சனை பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் நீர்வளத்துறை அமைச்சராக இருப்பவர் துரைமுருகன். திமுகவின் மூத்த நிர்வாகியாக வலம் வருகிறார். திமுகவின் பொது செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.

துரைமுருகனுக்கு தற்போது 86 வயது ஆகிறது. இவருக்கு இன்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து துரைமுருகன் சென்னை குரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் துரைமுருகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதற்கட்ட தகவலின்படி துரைமுருகன் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் துரைமுருகனுக்கு இன்னும் 2 அல்லது 3 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும். அதன்பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
அமைச்சர் துரைமுருகன் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி உடல்நல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் அவர் அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதும், அதன்பிறகு குணமாகி வீடு திரும்புவதும் நடந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் கூட துரை முருகன் சென்னையில் இருந்தபோது உடல்நல குறைவு ஏற்பட்டது. அப்போது அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அந்த சமயத்திலும் துரைமுருகன் சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்கு பிறகு அவர் குணமாகி வீடு திரும்பினார். அதன்பிறகு தொடர்ந்து கட்சி மற்றும் அரசியல் பணியில் அவர் ஈடுபட்டு வந்தார். தற்போது மீண்டும் அவர் காய்ச்சல், இருமலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக சில நாட்களுக்கு முன்பு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். கடும் காய்ச்சல் மற்றும் இருமலால் அவரும் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது உதயநிதி ஸ்டாலின் குணமாகி உள்ள நிலையில் அமைச்சர் துரைமுருகனுக்கு உடல்நல பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் துரைமுருகனின் ஆதரவாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
-
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
குடைச்சல் கொடுக்கும் கூட்டணி கட்சிகள்… திமுக முகாமில் கிளைமேக்ஸ் மாறுமோ? -
வேல்முருகன் 72 மணி நேர கெடு யாருக்கு லாபம்? தவெக பிளான் B.. திமுகவுக்கு வாழ்வுரிமை கட்சியால் லாஸ்? -
38 நாட்களில் தமிழ்நாட்டில் தேர்தல்.. இந்த விஷயங்களை மறக்காதீங்க! முடிவை தீர்மானிக்க போவதே இதான் -
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் LIVE: ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு.. மே 4ம் தேதி ரிசல்ட் -
டெல்டாவில்.. முக்கிய தொகுதியிலேயே அடிவாங்கும் திமுக.. சிக்கலில் பெரிய மீன்! இவருக்கே இந்த நிலைமையா? -
விஜயை பாஜக கூட்டணிக்குள் கொண்டு வரும் வரை அவகாசம்! மெகா பிளான்! சந்தேகம் தரும் தமிழக தேர்தல் அட்டவணை -
தேர்தல் விதி வருவதற்கு.. 20 நிமிடம் முன் சென்னையில் மாஸ் "சம்பவம்".. இது லிஸ்டுலேயே இல்லையே -
வேகம் எடுக்கும் திமுக.. வேட்பாளர்கள் யார் யார்.. 17 ஆம் தேதி நேர்காணலை தொடங்குகிறார் ஸ்டாலின் -
“அதிமுகவுடன் சேர்த்து மனசாட்சியையும் பாஜகவிடம் அடகு வச்சிட்டீங்களா?” - எடப்பாடிக்கு ஸ்டாலின் கேள்வி! -
2,000 ரூபாய் 'மெகா' பிளான்.. தகரும் தடை? கோட்டையை நோக்கி திமுகவின் மகளிர் உரிமை தொகை அஸ்திரம்! -
Election Exclusive: நான் என்ன வைகோவா? இப்பவே அத்துக்கிட்டு போறேன்.. அடம் பிடிக்கும் தவாக வேல்முருகன்! போனை போட்ட தலைகள்!












Click it and Unblock the Notifications