சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீரியஸாக பேசிக்கொண்டு இருந்த பொன்முடி.. சட்டென புகுந்த துரைமுருகன்.. குலுங்கி குலுங்கி சிரித்த அவை!

Google Oneindia Tamil News

சென்னை: இன்று சட்டசபையில் அமைச்சர் பொன்முடி பேசும் போது அமைச்சர் துரைமுருகன் அளித்த பதில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.

Recommended Video

    பொன்முடி பதில் | வேலூரில் புதியதாக கல்லூரிகள் அமைக்கப்படுமா?

    தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. தினமும் துறை வாரிய மானிய கோரிக்கை விவாதம் ஒதுக்கப்பட்டு கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டு வருகிறது.

    இன்று போக்குவரத்து மற்றும் சுற்றுலா துறை மீதான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

    சுயக்கட்டுப்பாடு, பிறர் மீதான பரிவு, ஈகையை சிந்திக்கும் காலம்... ரம்ஜான் வாழ்த்து கூறிய கமல்ஹாசன் சுயக்கட்டுப்பாடு, பிறர் மீதான பரிவு, ஈகையை சிந்திக்கும் காலம்... ரம்ஜான் வாழ்த்து கூறிய கமல்ஹாசன்

    அதிமுக கேள்வி

    அதிமுக கேள்வி

    கே.வி. குப்பம் தொகுதியில் தமிழ்நாடு அரசு சார்பாக அரசு மகளிர் கலைக்கல்லூரி அமைத்து தர வேண்டும் என்று இன்று அதிமுக எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி கோரிக்கை வைத்தார். மக்கள் பல காலமாக இந்த கோரிக்கையை வைத்து போராட்டம் செய்து வருகிறார்கள். இதனால் மக்களின் கோரிக்கையை இந்த அரசு உடனே ஏற்க வேண்டும். அங்கு பெண்களுக்கு என்று தனியாக அரசு கலைக்கல்லூரி அமைத்து கொடுத்தால் மாணவிகள் அதிக அளவில் படிக்க வருவார்கள் என்று ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ பேசினார்.

    பொன்முடி பதில்

    பொன்முடி பதில்

    இதையடுத்து சட்டசபையில் பதில் அளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தொகுதிக்கு குறைந்தது ஒரு அரசு கலைக்கல்லூரி இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருக்கிறார். அதன் அடிப்படையில் அரசு காலை அறிவியல் கல்லூரி இல்லாத தொகுதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறோம். உங்கள் தொகுதியில் ஏற்கனவே கலை அறிவியல் கல்லூரி இருக்கிறது.

     இன்னொரு கல்லூரி

    இன்னொரு கல்லூரி

    உங்களுக்கு அடுத்த தொகுதியிலும் 8 கிமீ தூரத்தில் இன்னொரு கல்லூரி இருக்கிறது. இரண்டுமே அரசு கல்லூரிகள்தான். இதனால் மீண்டும் அங்கே தனியாக மகளீர் கல்லூரி அமைக்கும் எண்ணம் இல்லை. மகளிருக்கு தனியாக கல்லூரி இப்போது தொடங்குவது அவசியம் இல்லை. ஏனென்றால் ஏற்கனவே இருக்கிற கல்லூரியில் மாணவர் சேர்க்க முழுமையாக நடைபெறவில்லை. அதற்கு முதலில் மாணவர்கள் சேர வேண்டும்.

    குறுக்கிட்ட துரைமுருகன்

    குறுக்கிட்ட துரைமுருகன்

    அதேபோல் பெண்களும், ஆண்களும் இப்போது சேர்ந்து படிக்கிறார்கள். சிலர் கோயேட் கல்லூரி வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். நீங்கள் மகளிர் கல்லூரி கேட்கிறீர்கள். ஆனால் இருக்கிற கல்லூரியிலேயே மாணவர்கள் குறைவாக உள்ளனர். இதற்கான மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முயற்சிகள் எடுக்கப்படும், இதனால் அங்கு புதிய கல்லூரி அமைக்கும் எண்ணம் இல்லை என்று அமைச்சர் பொன்முடி சீரியஸாக விளக்கம் கொடுத்தார்.

    குலுங்கிய அவை

    குலுங்கிய அவை

    இந்த பேச்சை சிரித்தபடி கவனித்துக்கொண்டு இருந்த அமைச்சர் துரைமுருகன் எழுந்து நின்று.. கல்லூரி இல்லை என்பதை எவ்வளவு நாசுக்காக அமைச்சர் சொல்லி இருக்கிறார். இல்லை என்பதை இவ்வளவு அழகாக சொன்ன மந்திரி இவர் மட்டும் என்று துரைமுருகன் கிண்டலாக குறிப்பிட்டார். இதை கேட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், திமுக உறுப்பினர்கள் சிரித்தனர். அமைச்சர் பொன் முடியும் சிரித்துக்கொண்டே அமர்ந்தார்.

    English summary
    Minister Duraimurugan's reply to Minister Pon Mudi made members laugh in assembly. இன்று சட்டசபையில் அமைச்சர் பொன்முடி பேசும் போது அமைச்சர் துரைமுருகன் அளித்த பதில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X