திருவள்ளுவரை திமுக உறுப்பினர்னு நினைச்சிட்டாங்க.. அதிமுகவை விளாசி தள்ளிய எ.வ.வேலு
சென்னை: அதிமுகவினர் திருவள்ளுவரை திமுக உறுப்பினர் என்றே நினைத்து கொள்கின்றனர் என்று அமைச்சர் எ.வ.வேலு சரமாரியாக சாடியுள்ளார்.
சென்னையிலுள்ளது புகழ் பெற்ற வள்ளுவர் கோட்டம். இதை புனரமைத்து சீரமைப்பது தொடர்பாக தமிழ்நாடு நெடுஞ்சாலை மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வு மேற்கொண்டார்.
பொதுப் பணித்துறையின் முதன்மைச் செயலாளர் சந்தீப்சக்சேனா உட்பட உயர் அதிகாரிகள் இந்த ஆய்வின்போது அமைச்சருடன் இருந்தனர்.

வள்ளுவர் கோட்டம்
வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவாரூர் தேர், பொது அரங்கம், மேல்தளம் உட்பட பல பகுதிகள் பராமரிப்பின்றி கிடப்பதை வேலு கவனித்தார். எவற்றையெல்லாம் சீர் செய்ய வேம்டும் என்று அப்போது வேலு அமைச்சர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். அதிகாரிகள் அதை குறிப்பெடுத்துக் கொண்டனர்.

அமைச்சர் வேலு பேட்டி
பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் வேலு, வள்ளுவர் கோட்டம் பராமரிப்பின்றி சீர் கெட்டுள்ளதால், அதனை நேரடியாக ஆய்வு செய்து சீரமைக்குமாறு முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டிருந்தார். அதன்பேரில் இன்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டேன்.
தமிழ் பண்பாட்டின் அடையாளமாக இருப்பது தான் வள்ளுவர் கோட்டம். தமிழரின் அடையாளம் திருவள்ளுவர். திருவள்ளுவரின் திருக்குறளை உலக பொதுமறை என்று அழைக்கிறோம்.

10 வருடங்களாக பராமரிப்பு இல்லை
இப்படி சிறப்புகள் பெற்ற திருவள்ளுவர், முந்தைய ஆட்சியில் கவனிக்கப்படவில்லை. சுமார் 10 ஆண்டுகளாக முந்தைய கட்சி ஆட்சியில், வள்ளுவர் கோட்டம் பராமரிக்காமல், சீர்கெட்டுள்ளது.

திருவள்ளுவர் திமுக உறுப்பினர் இல்லை
அதிமுகவிற்கு திருவள்ளுவர் என்றாலே பிடிப்பதில்லை, திருவள்ளுவரை திமுக உறுப்பினர் என நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். எனவேதான், திருவள்ளுவரை தொடர்ந்து புறக்கணித்தனர். சமர்சீர் பாட புத்தகத்தில் இருந்து வள்ளுவர் படத்தை நீக்கினார்கள். இவ்வாறு அமைச்சர் எ.வே.வேலு தெரிவித்தார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications