தூங்குபவர்களை எழுப்பலாம்.. நடிப்பவர்கள் எழுப்ப முடியாது - விமர்சனத்திற்கு அமைச்சர் சேகர்பாபு பதில்!
சென்னை : தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்டிக்கும் நியாய வாடகைக் குழு நிர்ணயிக்கும் வாடகை திருக்கோயில் நிலங்களில் குடியிருக்கும் வாடகைதாரர்களிடம் வசூலிக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் அமைந்துள்ள திருக்கோயில்களில் நடைபெற்று வரும் திருப்பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் அமைந்த அரசு பொறுப்பேற்று 14 மாத காலம் முடிவடைவதற்குள்ளாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு திருக்கோயில்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.

அமைச்சர் சேகர்பாபு
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "இன்றைக்கு மயிலாடுதுறை மாவட்டம், கருவாழக்கரை காமாட்சியம்மன் திருக்கோயில், சீர்காழி சட்டநாதசுவாமி திருக்கோயில், திருவெண்காடு, சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் மற்றும் உதவி பெறும் அரசு மேல்நிலைப்பள்ளி, கீழப்பெரும்பள்ளம், நாகநாதசுவாமி திருக்கோயில் ஆகியவற்றையும், தமிழ் மூதாட்டி ஔவையாருக்கு மணிமண்டபம் ஒரு கோடி ரூபாயில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் நாகப்பட்டினம் மாவட்டம் துளசியாப்பட்டினத்தில் ஔவையார் மணிமண்டபம் கட்டப்படவுள்ள இடத்தினையும், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களையும் ஆய்வு செய்தோம்.

திருக்கோயில் பணிகள்
திருவாரூர் தியாராஜ சுவாமி திருக்கோயிலின் நடைபாதைகளை முழுவதுமாக கற்களால் அமைக்கப்படுகின்ற பணிக்கு சுமார் 5.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த திருக்கோயிலை சுற்றி அதிக அளவு இருள் சூழ்ந்த நிலை இருப்பதை மாற்றி முழுவதுமாக மின்சாரம் ஒளி பெறுகின்ற வகையில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்து சுற்று பிரகாரத்தை சுற்றிவரும் வகையில் சுமார் 2 கோடி ரூபாய் செலவில் மின்சார அமைப்புகளை முழுமையாக மாற்றி ஒளி வெள்ளத்தில் இந்த திருக்கோயில் இருக்கின்ற அளவிற்கு பல்வேறு பணிகளை மேற்கொள்ள இருக்கின்றோம்.

கமலாலய குளம்
அதேபோல் முதலமைச்சர் ஆணையின்படி, மனுநீதி சோழன் வாழ்க்கை வரலாற்றை விளக்குகின்ற அந்த மணிமண்டபம் ரூ.29 லட்சம் செலவில் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அதற்கு கூடுதலாக நிதி தேவைப்படும் எனினும் சுற்றி இருக்கின்ற அனைத்து சுவர்களையும் திருக்கோயிலின் தொன்மை மாறாமல் சுற்றுச்சுவரை எழுப்பி, தொல்லியல் துறையோடு இணைந்து பழுது பார்க்கின்ற பணியினையும் மேற்கொள்ள இருக்கிறோம். கமலாலய குளம் என்ற பிரசித்தி பெற்ற இந்த குளத்தில் படிக்கட்டுகள் இல்லாத இடங்களில் ஏதாவது ஒரு வகையில் பெரும் மழை வெள்ளம் ஏற்படும் பொழுது சரிந்து வருகின்ற நிலையில் இருக்கின்றது. அதனை ஆய்வு செய்து, செப்பனிட்டு இந்த முறை திருத்தேரை ஓட்டுவோம் என்றும் கூறியிருந்தோம். அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலோடும் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் உதவியோடும் பாதையை செப்பனிட்டு திருத்தேரும் ஓடியிருக்கிறது." எனத் தெரிவித்தார்.

சிலைகள் மீட்பு
தமிழ்நாட்டில் கடத்தப்பட்ட சிலைகள் மீட்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, இந்து சமய அறநிலைத்துறை பொறுத்த அளவில் சிலைகள் மீட்பதற்கென்று ஐடல் விங் என்ற ஒரு துறை இருக்கின்றது என தெரிவித்தார். மேலும், கடத்தப்படவிருந்த சிலைகளையும் மீட்டிருக்கின்றோம், அதேபோல் வெளிநாடுகளுக்கு கடத்திச் சென்ற சிலைகளையும் மீட்டு டெல்லியில் நடந்த ஒரு விழாவிலே 13 சிலைகளை பெற்று இருக்கின்றோம். அதோடு மட்டுமல்லாமல் கடத்தப்பட்டு வெளிநாட்டிலே இருக்கின்ற பல்வேறு சிலைகள் அடையாளம் காணப்பட்டு அதை மீட்டு வருகின்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இருந்த தொய்வு நிலையை சுத்தமாக மாற்றி ஐடல் விங் முழுமையாக செயல்பட்டு சிலைகள் மீட்டல், சிலை கடத்தலை தடுத்து நிறுத்துவது போன்ற பல்வேறு பணிகளை அனைவரும் மகிழ்ச்சி கொள்ளும் அளவிற்கு செய்து வருவதாக தெரிவித்தார்.

தூங்குபவர்களை எழுப்பலாம்
இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்ரமணியன் திருக்கோவில் நகையெல்லாம் உருக்கி தங்க பிஸ்கட்டுகளாக மாற்றி முறைகேடு நடப்பதாக குற்றம்சாட்டியது குறித்த கேள்விக்கு, தூங்குபவர்களை எழுப்பலாம் தூங்குவது போல நடிப்பவர்கள் எழுப்ப முடியாது என்று கூறினார். பல்வேறு திருக்கோயிலில் இதுபோன்று வந்திருக்கின்ற நகைகளை உருக்கி அதனை வங்கியில் டெபாசிட் செய்து அதன் வட்டித் தொகையை அந்தந்த திருக்கோயில்களுக்கு செலவிட்டு வருகிறோம், அந்த திருக்கோயிலின் திருப்பணிக்கு ஏதாவது தங்கம் தேவைப்பட்டால் வங்கியில் வைப்பு நிதியாக வைத்திருக்கின்ற தங்கத்தை திரும்ப பெற்று பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் எனத் தெரிவித்தார்.

கோவில் நிலங்கள்
கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு புதிய வாடகை நிர்ணயம் செய்வது சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்விக்கு, அதற்கான பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பல்வேறு வகையில் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது அதனை ஒழுங்குபடுத்தும் விதமாக நியாய வாடகைக் குழு ஒன்றை அமைத்திருப்பதாகவும் தெரிவித்தார். அதில் நமது தலைமைச் செயலாளர் இடம் பெற்றிருக்கின்றார். மேலும் ஓய்வு பெற்ற 2 கூடுதல் ஆணையர்கள் 2 இணை ஆணையர்களும் இடம் பெற்றிருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வாடகை குறைவாக இருக்கின்றது, ஒரு சில இடங்களில் வாடகை மிக அதிகமாக இருக்கின்றது. இவற்றை ஒழுங்குபடுத்தும் வகையில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதலமைச்சர் ஆணையைப் பெற்று, நியாய வாடகைக் குழு என்ன வாடகையை நிர்ணயிக்கிறதோ அது வசூலிக்கப்படும். அந்த வாடகை குடியிருப்பவர்கள் பயன்பெறும் வகையில் இருக்கும் என்பது உறுதி எனத் தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications