அண்ணாமலை என்ன மத்திய அமைச்சரா? ஆமா அன்னைல இருந்து அரவக்குறிச்சி பக்கமே காணோமே ஏன்? செந்தில் பாலாஜி
சென்னை: 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தோற்றுவிட்டு போனதோடு சரி அரவக்குறிச்சி பக்கமே அண்ணாமலை வருவதில்லையே ஏன் என்ற கேள்வியை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில் எனக்கு உத்தரவு போடுவதற்கு அண்ணாமலை ஒன்றிய அமைச்சராக இருக்கிறாரா என்ன? 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சியில் 24 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டார்.

அண்ணாமலையை காணோமே
அவர் வெளியே துரத்தியடிக்கப்பட்டார். ஊர் பக்கமே அண்ணாமலையை பார்க்க முடியவில்லை. மத்திய அரசின் பாஜக கட்சி பொது வெளியில் தனியாக செயல்படக் கூடிய அமலாக்கத் துறை இவையெல்லாம் செய்யும் என சொல்வதிலிருந்து அமலாக்கத் துறை தங்கள் அரசியலுக்காக அந்த கட்சி எந்த அளவுக்கு பயன்படுத்துகிறது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

மக்கள்
மக்களுக்கு பயன்படும் வகையில் அரசியல் கட்சியினர் ஏதாவது கேட்டால் நாங்கள் பதில் சொல்ல தயாராக இருக்கிறோம். ஆனால் தனது இருப்பை காட்டிக் கொள்ள சம்பந்தமே இல்லாமல் அண்ணாமலை பேசுகிறார் என நான் பல முறை சொல்லிவிட்டேன். மின்வாரியத்தில் தவறு இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம். நீதிமன்றம் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பும்.

ஆவணங்கள்
நாங்கள் அதுகுறித்த ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம். கையில் எந்த ஆதாரமும் இல்லாமல் அண்ணாமலை தமிழக அரசின் மீது குற்றச்சாட்டுகளை சொல்வது ஏற்புடையது அல்ல. வெட்டியா இருக்கும் அண்ணாமலையின் கேள்விக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. நான் கேட்கும் கேள்வி இதுதான் மத்திய அரசு எத்தனை டாலருக்கு நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான உத்தரவை கொடுத்திருக்கிறார்கள், தமிழக அரசு ஒரு டாலருக்கு எவ்வளவு நிலக்கரியை இறக்குமதி செய்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் கொடுக்க சொல்லுங்கள்.

ஆர்ப்பாட்டம்
கேஸ் விலை, பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பாஜக ஏன் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை? இதற்கெல்லாம் அண்ணாமலையிடம் கேளுங்கள். கேட்டு அவர் சரியான பதிலை சொன்னால் அவர் கேட்கும் கேள்விகளை என்னிடம் கேளுங்கள். ஆவணங்கள் இருந்தால் அண்ணாமலை கொடுக்கட்டும். நான் பதில் தருகிறேன். 1500 கோடி ரூபாய் நிலுவை தொகை மாதாமாதம் முதல்வர் ஸ்டாலினின் முயற்சியால் மத்திய அரசு வழங்கி வருகிறது என்றார் செந்தில் பாலாஜி.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications