சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உங்கள் சேவை திமுகவுக்கு தேவை! கரூர் அதிமுகவினரை வேறு மாதிரி டீல் செய்த அமைச்சர் செந்தில்பாலாஜி!

Google Oneindia Tamil News

சென்னை: கரூர் மாவட்டத்தில் அதிமுகவின் அடிமட்டம் வரை கை வைத்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவில் மட்டுமே இதுவரை அதிமுக முக்கிய நிர்வாகிகளை திமுக பக்கம் இழுத்து வந்த இவர், இப்போது கிளைக்கழகம் வரை டீல் செய்து அதிமுகவினரை சாரை சாரையாக வளைத்து வருகிறார்.

அந்த வகையில் கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியத்துக்குட்பட்ட கள்ளை, கல்லடை, நாகனூர், ஊராட்சிகளை சேர்ந்த முக்கிய அதிமுக தலைகளை திமுக பக்கம் அழைத்து வந்துவிட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

அதிமுகவில் 2 தலைகள்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய செந்தில் பாலாஜி.. 'மொத்தமா போச்சே..’ பாஜகவுக்கும் ஷாக்! அதிமுகவில் 2 தலைகள்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய செந்தில் பாலாஜி.. 'மொத்தமா போச்சே..’ பாஜகவுக்கும் ஷாக்!

அமைச்சர் செந்தில்பாலாஜி

அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்து வந்த அமைச்சர் செந்தில்பாலாஜி, இப்போது தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ மாவட்டச் செயலாளராக புரோமோஷன் ஆகியிருக்கிறார். இதனால் புது உற்சாகத்துடன் வலம் வரும் அவர், தனது சொந்த மாவட்டமான கரூரில் அதிமுக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளை திமுகவில் இணைக்கும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளார். மாவட்ட அளவில் என மேலோட்டமாக இல்லாமல் கிளைக்கழகம் வரை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

திமுகவில் இணைப்பு

திமுகவில் இணைப்பு

அதன் பயனாக அதிமுகவைச் சேர்ந்த தோகைமலை ஒன்றிய துணை பெருந்தலைவரும் - கள்ளை ஊராட்சி 3வது வார்டு உறுப்பினருமான பாப்பாத்தி சின்னவழியான், நாகனூர் ஊராட்சி 11வது வார்டு உறுப்பினர் தனலட்சுமி சங்கர், கல்லடை ஊராட்சி 9வது வார்டு உறுப்பினர் வளர்மதி ஆசைக்கண்ணு - குளித்தலை ஒன்றிய கவுன்சிலரான எஸ்.ராஜேஸ்வரி, த.மா.கா.வை சேர்ந்த 7வது வார்டு கவுன்சிலர் எம்.சத்யா குட்டிமோகன் தோகைமலை அதிமுக ஒன்றிய துணைச் செயலாளர் டி.சின்னவழியான், ஆகியோர் செந்தில்பாலாஜி அழைப்பை ஏற்று திமுகவில் இணைந்தனர்.

வேறு மாதிரி டீல்

வேறு மாதிரி டீல்

கிராமப்புற அதிமுக நிர்வாகிகள் தானே என அலட்சியம் காட்டாமல் அவர்களையும் சென்னைக்கு அழைத்துச் சென்று முதலமைச்சரிடம் முறைப்படி நேரம் கேட்டு வாங்கி அவர் முன்னிலையில் அதிமுகவினரை திமுகவில் இணைத்திருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி. பொதுவாக கிராமப்புற நிர்வாகிகள் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு வருகிறார்கள் என்றால் மாவட்டச் செயலாளர்கள் அதிகப்பட்சம் மாவட்ட அமைச்சர்களுடன் அந்த இணைப்பு விழா நடந்துமுடிந்து விடும்.ெ

எம்.ஆர். விஜயபாஸ்கர்

எம்.ஆர். விஜயபாஸ்கர்

ஆனால் அமைச்சர் செந்தில்பாலாஜியின் டீலிங் வேறு மாதிரியாக உள்ளது. கோவை மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சராக இருந்தாலும் கரூர் மாவட்ட அரசியலில் ஒரு கண் வைத்த வண்ணம் இருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இதனிடையே இவருக்கு பதிலடி கொடுக்க திட்டமிட்டுள்ள அதிமுக கரூர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், உட்கட்சித் தேர்தலில் செந்தில்பாலாஜி மீது அதிருப்தியில் உள்ள திமுகவினரை அதிமுகவுக்கு இழுக்க காய் நகர்த்தி வருகிறார்.

English summary
Minister Senthilbalaji drew AIADMK officials to DMK in Karur district
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X