கல்வி உதவித்தொகை : முதல் தலைமுறை பட்டதாரி என்ற நிபந்தனையில் மாற்றம் - அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
கல்வி உதவித் தொகை திட்டங்களின் கீழ் பயன்பெற ‘முதல் பட்டதாரி’ (First Graduate) என்பதற்கு பதிலாக ‘முதல் தலைமுறை பட்டதாரி’ (First Generation Graduate) என்று நிபந்தனையில் மாற்றம் செய்யப்படும் என்று பிற்படுத்தப்பட்டோர் மானி
சென்னை: பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ மாணவியருக்கான கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான வருமான வரம்பு 2 லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் பயன்பெறும் முதல் பட்டதாரி என்பதற்கு பதிலாக முதல் தலைமுறை பட்டதாரி என்ற நிபந்தனையில் மாற்றம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பு சமர்பிக்கப்பட்டது. மேலும், பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் முக்கிய அறிவிப்புகளை சட்டசபையில் வெளியிட்டுள்ளார்.

சட்டசபையில் வெளியிடப்பட்ட 30 முக்கிய அறிவிப்புகள்:
259 கல்லூரி விடுதிகளில் 2 கோடியே 59 லட்சம் ரூபாய் செலவில் செம்மொழி நூலகம் ஏற்படுத்தப்படும். 259 கல்லூரி விடுதிகளுக்கு 1 கோடியே 44 இலட்சத்து 40 40 ஆயிரம் ரூபாய் செலவில் உடற்பயிற்சி கருவிகள் மற்றும் விளையாட்டு கருவிகள் வழங்கப்படும்.
40 விடுதிகளுக்கு 10 லட்சம் ரூபாய் செலவில் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் வழங்கப்படும். 259 கல்லூரி விடுதிகளில் மாணவ மாணவியருக்கு தமிழ்நாடு திறன் வளர்ச்சி மேம்பாட்டு கழகம் மூலம் தனித்திறன் மற்றும் ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்படும்.
இயக்கங்கள் மற்றும் மாவட்ட அலுவலகங்களுக்கு IFHRMS திட்டத்திற்காக 85 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் கணினிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும்.
பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ மாணவியருக்கான கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான வருமான வரம்பு 2 லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் பயன்பெறும் முதல் பட்டதாரி என்பதற்கு பதிலாக முதல் தலைமுறை பட்டதாரி என்ற நிபந்தனையில் மாற்றம் செய்யப்படும்.
கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் வழங்கப்படும் உண்டி மற்றும் உறையுள் கட்டடங்கள் 9 கோடி ரூபாய் கூடுதல் செலவில் உயர்த்தி வழங்கப்படும். விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்,காப்பாளிகளுக்கு 83 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் செலவில் புத்தாக்க பயிற்சி வழங்கப்படும்.
மாவட்ட அளவில் சிறந்த விடுதிகளுக்கு 7 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் பரிசுகள் வழங்கப்படும்.
20 கல்லூரி மாணவர் விடுதிகளுக்கு 23 லட்சத்து 60,000 ரூபாய் செலவில் அங்கீகார அடிப்படையில் பயோமெட்ரிக் கருவிகள் பொருத்தப்படும்.
பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் விடுதிகளில் மாணவ மாணவியர் சேர்க்கைக்கான ஆண்டு வருமானம் 1 லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
விடுதிகளில் சிறப்பு பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ள 13 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 7 மாணவியர் விடுதிகளுக்கு 91 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் செலவில் சுற்றுச்சுவர் கட்டப்படும்.
விடுதி மாணவ மாணவியருக்கான பல்வகை செலவின தொகை 4 கோடியே 80 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் செலவில் உயர்த்தப்படும்.
234 கள்ளர் பள்ளி கட்டடங்களில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு கழிப்பிட வசதிகள் 4 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். கள்ளர் பள்ளி கட்டடங்களில் 6 கோடி ரூபாய் செலவில் பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
15 கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 9ஆம் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் தொடங்கப்படும். அனைத்து கள்ளர் தொடக்கப்பள்ளிகளில் முதலாம் வகுப்பில் ஆங்கில வழியிலான வகுப்புகள் தொடங்கப்படும். கிராமப்புற மாணவியருக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்துக்கான வருமான வரம்பு 72 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
நரிக்குறவர் மற்றும் சீர்மரபினர் நலவாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர் அல்லது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை ஆண்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாகவும் பெண்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த அதிக எண்ணிக்கையில் பயன்படும் வகையில் இலவச மின்மோட்டார் உடன் கூடிய தையல் எந்திரம் இலவச பித்தளை தீப்பெட்டி மற்றும் இலவச வீட்டுமனை வழங்கும் திட்டங்களுக்கான வருமான வரம்பு எழுபத்தி இரண்டு ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் ஆக உயர்த்தி வழங்கப்படும்.
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய சலவை தொழில் செய்பவர்கள் அதிக எண்ணிக்கையில் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் வழங்கப்படும்.
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு ஆங்கிலப் பேச்சாற்றல் மற்றும் தனித் திறன் வளர்க்கும் பயிற்சி தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் வழங்கப்படும். கல்லூரி விடுதிகளில் தேவையை கருத்தில் கொண்டு இரண்டு படுத்தப்பட்டு சீர்மரபினர் பள்ளி விடுதிகள் கல்லூரிகளாக 17 லட்சத்து 93 ஆயிரம் செலவில் நிலை உயர்த்தப்படும்.
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ மாணவியரின் நலன் கருதி மாநில அரசு திட்டத்தின் கீழ் 2 விடுதிகளுக்கு 6 கோடியே 60 இலட்சம் 54 ஆயிரம் செலவில் புதிய சொந்த கட்டிடம் கட்டப்படும்.
மாநில அளவில் மையப்படுத்தப்பட்ட முறைகள் விடுதிகளுக்கு கான மளிகை பொருட்கள் தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டத்தின் படி கொள்முதல் செய்யப்படும். சிறப்பாகச் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களால் 50 ஆயிரம் ரூபாய் செலவில் விருதுகள் வழங்கப்படும்.
விடுதி மாணவ மாணவியருக்கு கட்டுரைப் போட்டி விளையாட்டுப் போட்டி போன்ற போட்டிகள் கலை திருவிழா என்ற பெயரில் மூன்று லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் நடத்தப்படும். தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்துவரும் இட ஒதுக்கீட்டுக் கொள்கை பற்றியும் சமூக நீதி செயல்பாடுகள் பற்றியும் வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் இட ஒதுக்கீடு மற்றும் சமூக நீதி குறித்து பல்வேறு தகவல்கள் புத்தகம் 5 லட்சம் ரூபாய் செலவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் சிவசங்கள் அறிவித்துள்ளார்.
முதல் தலைமுறை பட்டதாரிக்கான சலுகைகள் பெறுவது எப்படி?
தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்டு, குடும்பத்திலேயே முதன்முதலாக பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு, கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கும் அரசின் திட்டம் உள்ளது. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடை மருத்துவம் மற்றும் சட்டக் கல்லூரிகளில் சேரும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு 2010-11-ம் கல்வி ஆண்டு முதல் கல்விக்கட்டணம் முழு வதும் தமிழக அரசு சார்பில் செலுத்தப்பட்டு வருகிறது.
அதேசமயம், இந்த சலுகையை பெற விரும்பும் மாணவர்கள், கவுன்சிலிங் செயல்பாட்டில் கலந்துகொண்டு, புரபஷனல் கல்வியை தேர்வு செய்து, அரசு, அரசு உதவிபெறும் அல்லது சுயநிதி கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் மட்டுமே இச்சலுகையைப் பெறுவார்கள். ஆனால், அந்த சலுகையை பெற விரும்பும் விண்ணப்பதாரரின் குடும்பத்தில், யாரேனும் ஒருவர் அந்த சலுகையை ஏற்கனவே பெற்றிருந்தால் இவர் மீண்டும் அதை அனுபவிக்க முடியாது.
இந்த சலுகையைப் பெறுவதற்கு முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் தேவைப்படும். இந்த சான்றிதழை பெற்றுக்கொள்வதற்கு தற்போது ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க முடியும். அப்படி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் போது சில ஆவணங்கள் முக்கியமாக தேவைப்படும். அந்த வகையில் விண்ணப்பம் செய்பவரின் புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை , 12 ஆம் வகுப்பு சான்றிதழ், கல்லூரியில் விண்ணப்பம் செய்த படிவம், விண்ணப்பதாரரின் தந்தை மற்றும் தாய் கல்வி சான்றிதழ், உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் கல்வி சான்றிதழ் ஆகியவை முக்கியமானதாகும்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications