"மிஸ் யூ அப்பா.." கருணாநிதி பற்றி நெகிழும் குஷ்பு.. "எனக்கு தந்தை மாதிரி" உருகும் எஸ்.வி.சேகர்
சென்னை: ஒரு நாள் கூட வெற்றிடத்தை உணராமல் இல்லை, நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியர், மிஸ் யூ அப்பா என மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளில் டுவீட் வெளியிட்டுள்ளார், பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு.
Recommended Video
குஷ்பு தனது அரசியலின் ஆரம்ப காலங்களில் திமுகவில் இருந்தார். அப்போது திமுகவின் தலைவராக இருந்த கருணாநிதியுடன் அவ்வப்போது சந்தித்து பேசும் வாய்ப்பு அவருக்கு அமைந்தன.
ஆனால், வேறு சில நிர்வாகிகளுக்கும், குஷ்புவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து திமுகவிலிருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். ஆனால் அங்கும் லோக்சபா தேர்தலில் சீட் கொடுக்காத கோபத்தில், பாஜகவில் சேர்ந்தார். ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் இந்த சட்டசபை தேர்தலில் குஷ்பு போட்டியிட்டார். ஆனால், திமுக வேட்பாளர் எழிலனிடம் தோற்றார்.

வெற்றிடம்
இந்த நிலையில்தான், கருணாநிதியின் 98வது பிறந்த நாளான இன்று டுவிட்டரில், கருணாநிதி குறித்து புகழாரம் சூட்டியுள்லார் குஷ்பு. வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதாக நான் உணராத ஒரு நாள் கூட இல்லை. கடவுளை விட குரு மேலானவர். நீங்கள்தான் எனது சிறப்பான ஆசிரியர். உங்களது ஆசீர்வாதங்கள், எப்போதுமே என் மீது விழுந்து கொண்டே இருக்கும் என்பது உறுதி. மிஸ் யூ அப்பா. இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

குஷ்புவிற்கு கேள்விகள்
ஒரு பக்கம், பாஜக ஆதரவாளர்கள், கருணாநிதியை விமர்சனம் செய்து டுவிட்டரில் டேக் போட்டு டிரெண்ட் செய்து வருகிறார்கள். இன்னொரு பக்கம், அக்கட்சியின் முக்கிய பிரமுகராக மாறிய குஷ்பு, கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது அரசியல் நாகரீகமாக பார்க்கப்பட்டாலும், குஷ்பு கட்சி மாறப்போகிறாரா என்று அவரது பின்னூட்டத்தில் கேட்கும் நெட்டிசன்களையும் பார்க்க முடிகிறது.

எஸ்.வி.சேகர் வாழ்த்து
இதேபோலத்தான், பாஜக பிரமுகரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.வி.சேகரும் கருணாநிதி பிறந்த நாளுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். எஸ்.வி.சேகர், அதிமுகவில் எம்எல்ஏவாக இருந்தவர். பிறகு ஜெயலலிதாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பாஜகவில் சேர்ந்தார்.

தந்தையை போல பாசம்
எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பதிவில், கட்சி அரசியல் தாண்டி ஒரு தந்தை போல் என் மேல் பாசம் காட்டியவர் கலைஞர் என்று தெரிவித்துள்ளார். மேலும், இதுவரை கருணாநிதியை எஸ்.வி.சேகர் சந்தித்த நிகழ்வுகளின் புகைப்பட தொகுப்பை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications