ஸ்டாலினுக்கு அழகிரி.. உதயநிதிக்கு அதிமுக.. ஒரே நாளில் அப்பாவுக்கும் பையனுக்கும் இப்படியா நடக்கும்?
திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் அவரின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கும் இன்று ஒரே நாளில் இரண்டு காமெடியான சம்பவங்கள் நடந்து இருக்கிறது.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் அவரின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கும் இன்று ஒரே நாளில் இரண்டு காமெடியான சம்பவங்கள் நடந்து இருக்கிறது.
தேர்தலுக்காக திமுக மிக தீவிரமாக செயலாற்றி வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த 10 நாட்களாக மிக தீவிரமாக தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்து வருகிறார்.
திருவாரூரில் ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். திமுக மட்டுமில்லாமல் கூட்டணி கட்சிகளுக்காகவும் ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். அதேபோல் உதயநிதி ஸ்டாலினும் கடுமையான பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார்.

உதயநிதி பிரச்சாரம்
இன்று திருவண்ணாமலையில் உதயநிதி தீவிரமாக பிரச்சாரம் செய்தார். திருவண்ணாமலையில் திமுக சார்பாக சி. என் அண்ணாதுரை போட்டியிடுகிறார். இவருக்காக இன்று உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அதிமுகவிற்கு எதிராக உதயநிதி கடுமையான விமர்சனங்களை இதில் வைத்தார்.

என்ன சொன்னார்
இந்த பிரச்சாரத்தின் போது, உதயநிதியிடம் மூதாட்டி ஒருவர் கை கொடுத்து பேசினார். உதயநிதியின் கன்னத்தை பிடித்து உரிமையோடு கிள்ளினார். ஆனால் இவர் அதிமுகவின் கொடி போட்டு இருந்த புடவையை உடுத்தி இருந்தார். அவரின் புடவை முழுக்க இரட்டை இலையும் இருந்தது.
— Udhay (@Udhaystalin) March 29, 2019 |
காலை
இதை உதயநிதி தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையம் முழுக்க வைரலானது. அதேபோல் இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட புகைப்படம் ஒன்றும் பெரிய வைரலானது.

அழகிரி புகைப்படம்
இன்று காலை ஸ்டாலின் மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு. வெங்கடேசனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது ஸ்டாலினுடன் ஒரு இளைஞர் புகைப்படம் எடுத்தார். அவரின் டீ சர்ட்டில் அழகிரியின் புகைப்படம் இருந்தது. அட அழகிரியின் ஆதரவாளர் ஸ்டாலினுடன் போட்டோ எடுக்கிறாரே என்று பெரிய வைரலானது அந்த புகைப்படம். இப்படி ஒரே நாளில் திமுகவின் இரண்டு புகைப்படம் பெரிய டிரெண்டாகி உள்ளது.
-
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி!












Click it and Unblock the Notifications