கோவையில் மூன்று கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது கண்டனத்திற்குரியது: மு.க. ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவையில் 3 கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது கண்டனத்துக்குரியது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவை டவுன்ஹால் ரோடு மாகாளியம்மன் கோவில் பகுதியில் கோவில் முன்பாக டயர்கள் வீசப்பட்டன; திரிசூலம் வளைக்கப்பட்டது என செய்திகள் வெளியாகின. இந்த காலித்தனத்தை செய்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

MK Stalin condemns tyres burn in front of Coimbatore Temples

இதேபோல் நல்லாம்பாளையத்தில் கோவில் பொருட்கள் எரிக்கப்பட்டன. இப்படி கோவையில் மொத்தம் 3 கோவில்கள் சேதப்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

MK Stalin condemns tyres burn in front of Coimbatore Temples

கோவையில் நேற்று மூன்று கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது.

பேரிடர் காலத்தில் அதிமுக்கியப் பிரச்சினைகளிலிருந்து, பொது கவனத்தை திசை திருப்பாதவண்ணம், குற்றம் புரிந்தோர் உடனடியாக சட்டத்தின் முன்னே நிறுத்தப்படுவதை முதலமைச்சர் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Recommended Video

    இந்துக்களை அரவணைப்பது திமுக.. கறுப்பர் கூட்டத்தோடு தொடர்புபடுத்துவது அற்பத்தனம்- ஆர்எஸ் பாரதி ஆவசேம்

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+