யாரென்று தெரிகிறதா.. என்னா ஒரு லுக்.. என்னா ஒரு ஸ்பீடு.. அடேங்கப்பா.. வைரலாகும் "சைக்கிள் ஸ்டாலின்"!
சைக்கிள் ஓட்டும் ஸ்டாலினின் வீடியோ வைரலாகி வருகிறது
சென்னை: யார் தெரியுதா பாருங்க.. என்னா ஒரு லுக்.. என்னா ஒரு ஸ்பீடு.. என்னா ஒரு ஸ்மார்ட்.. இது நம்ம ஸ்டாலினேதான்.. சைக்கிளிங் ஓட்டும் வீடியோதான் சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.
Recommended Video
பொதுவாகவே கருணாநிதி குடும்பத்துக்கு என்று ஒரு ஜீன் உள்ளது. அந்த குடும்ப உறுப்பினர்களுக்கு யாருக்கும் வயது அவ்வளவாக தெரியாது. இதில் அநியாயம் ஸ்டாலின்தான்... வயசு 67 ஆகிறது. ஆனாலும் இன்னும் யூத்ஃபுல்லாக இருக்கிறார் மனுஷர்!!

40 வயசு கடந்து ரொம்ப வருஷம் ஆகியும் திமுக இளைஞர் அணி தலைவராகவே இருந்தது அநேகமாக ஸ்டாலினாகத்தான் இருக்கும்.. அதற்கேற்ற தோற்றமும் அவருக்கு பெரிதும் கைகொடுத்தது. ஆனால் இதெல்லாம் சும்மா வந்து விடவில்லை. உடற்பயிற்சி செய்வதற்காகவே வீட்டில் தனியாக 'ஜிம்' வைத்திருக்கிறார் ஸ்டாலின்.
நமக்கு நாமே உட்பட எந்த தேர்தல் பிரச்சாரமாக இருந்தாலும் சரி, திடீரென கலர் கலர் டி- ஷர்ட் போட்டு, வயசு பையன்களின் காதில் புகைச்சலை தந்துவிடுவார்.. அந்த சமயங்களில் கலர் டீ-ஷர்ட்டில் வாக்கிங் & ஜாக்கிங்கில் படு யங்காக உருமாறுவார்!!
25 வருஷத்துக்கு முன்பும் ஸ்டாலின் இப்படித்தான் இருந்தார். ஒல்லியான தோற்றத்துடன், முன்பக்க நெற்றியில் கற்றைமுடி புரள, கலர் கலர் சட்டையில் இருப்பார்... இப்போதும் அப்படியேதான் இருக்கிறார். ஆனால் தலைமுடி மட்டும் கொட்டிவிட்டதுபோல தெரிகிறது. பொதுவாக, அளவுக்கு அதிகமாக சுருட்டை இருப்பவர்களுக்கு முடி கொட்டும் என்பது இயற்கை.. அந்த வகையில்தான் ஸ்டாலினுக்கும் கொட்டிவிட்டது. அதனால் புது விக் ஒன்றை வைத்துள்ளார்.. இதை வைத்தபிறகு இன்னும் ஸ்மார்ட் லுக் வந்துவிட்டது.
இதற்கு காரணம், இத்தனை வயதுக்கு பிறகும் தலைவராக பொறுப்பேற்றுள்ளாரே என்ற ஒரு பேச்சு எழுந்து வருவதுதான்... அதனாலேயே யூத்தாக தொண்டர்களிடம் தென்பட, விக் சமாச்சாரம் கை கொடுத்தது.. இப்போதும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.. அதில் ஸ்டாலின் சைக்கிள் ஓட்டுகிறார்.. வேகவேகமாக ஓட்டுகிறார்.நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார்.. பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஏதோ எக்சர்ஸைஸ் செய்வதற்காக சைக்கிள் ஓட்டுகிறார் என்று மட்டும் இதை கருத முடியாது... இதற்கு பின்னால் வேற ஒரு சமாச்சாரம் உள்ளதாம்.. "வயது முதிர்வு" என்ற விமர்சனத்தை நொறுக்கவே இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதுவும் சாட்சாத் பிகே-வின் வியூகங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.. இதுகுறித்த விமர்சனங்களும் சோஷியல் மீடியாவில் எழுந்து வருகின்றன.
எத்தனையோ அரசியல் காரணங்கள் அரசல்புரசலாக சொல்லப்பட்டாலும், எப்பவுமே வெள்ளை வேட்டி சட்டையில் பார்த்து பார்த்து பழகிவிட்ட ஸ்டாலினை, இப்படி புது புது கெட்டப்பில், புது புது ஸ்டைலில் யூத் ஃபுல்லாக பார்ப்பது தொண்டர்களுக்கு உத்வேகத்தையும், புத்துணர்ச்சியையும் தந்து வருகிறது.
-
5 வருஷமா மறக்க முடியல.. 2021ல் ஜஸ்ட் பாஸ்ஸில் வென்ற எம்.எல்.ஏ.க்கள்! தி-நகர் ரிசல்ட் தான் ஹைலைட்டே! -
இரவோடு இரவாக ட்விஸ்ட்.. திமுக, அதிமுகவுக்கு 3ம் சக்தி செக்? முதல்வர் நாற்காலியில் அமரப்போவது இவரா? -
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு.. இறுதியானது பங்கீடு -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
டெல்லியில் அதானி அனுப்பிய அட்வைஸ் தூது.. கவனமாய் கேட்டுக்கொண்ட விஜய்.. இனிதான் பெரிய ட்விஸ்டே -
வேல்முருகன் 72 மணி நேர கெடு யாருக்கு லாபம்? தவெக பிளான் B.. திமுகவுக்கு வாழ்வுரிமை கட்சியால் லாஸ்? -
சென்னையில் இப்தார் நோன்பில் திடீர் திருப்பம்: தேஜ கூட்டணி தலைவர்கள் செய்த "அந்த" காரியம்! திமுக குஷி -
கூடுதல் தொகுதிகள்.. கறார் கம்யூனிஸ்ட்.. அதிர்ச்சியில் அறிவாலயம்.. தொடரும் இழுபறி -
இந்திய கம்யூனிஸ்ட் நினைச்சது நடக்குமா? திமுக கூட்டணியில் நாளை தொகுதி பங்கீடு கையெழுத்தாக வாய்ப்பு -
எம்.ஜி.ஆர் சொன்ன திருடன் போலீஸ் கதை! கருணாநிதி சொன்ன கட்டுமரக் கதை! - 1980ல் மீண்டும் அதிமுக ஆட்சி -
தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்கள் மட்டுமே இருக்கு.. அர்ச்சனா பட்நாயக் சொன்ன அப்டேட்! -
ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.. 234 தொகுதிகளும் என் கன்ட்ரோல்.. மா.செ. கூட்டத்தில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications