ஆகஸ்ட் 15ல் வரும் 100வது நாள்.. இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஸ்டாலின்.. போட்ட அதிரடி உத்தரவு
சென்னை : ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த மே 7ம் தேதி பதவியேற்றது. அவர் தலைமையிலான அரசு பதவியேற்று 100வது நாள் சுதந்திரத் தினமான ஆகஸ்ட் 15ம் தேதி வருகிறது. அன்று தேசிய கொடி ஏற்றப்போகிறார். இதனால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ள ஸ்டாலின், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் பெறப்பட்ட அத்தனை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் சூழலில் மக்களிடையே அரசின் மீது நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று விரும்பும் ஸ்டாலின், 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறாராம்.
ஸ்டாலின் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்வைத்த விஷயம், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற திட்டம். ஒவ்வொரு ஊராக போய் மனு வாங்கிய ஸ்டாலின், அதை ஒரு பெட்டியில் போட்டு வைத்து வந்தார். ஆட்சிக்கு வந்த பின் இவை திறக்கப்பட்டு முதல் 100 நாளில் இந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்று மக்களிடம் உறுதி அளித்தார்.

உங்கள் தொகுதியில் முதல்வர்
இதனை அப்போது ஆளும் கட்சியாக இருந்த அதிமுக கிண்டல் செய்தது. ஆனால் அவர் சொன்னபடியே உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களை ஆட்சிக்கு வந்த பின் நிறைவேற்ற முடிவு செய்தார். இதனிடையே ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் இத்திட்டம், 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்று பெயரில் தொடங்கப்பட்டது,

100வது வது நாள்
இதற்கான ஐஏஏஸ் அதிகாரியை தனியாக நியமித்தார். ஐஏஏஸ் அதிகாரி தலைமையிலான அதிகாரிகள் குழு மனுக்களை விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. பெரும்பாலான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையல் ஸ்டாலின் அரசின் 100-வது நாள் ஆகஸ்ட் 15-ம் தேதியன்று வருகிறது. அன்றைய நாள் நாட்டின் சுதந்திர தினம் என்பதால் முதல் முறையாக கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வர் ஸ்டாலின் ஏற்றவிருக்கிறார் .

பட்ஜெட்டில் சூப்பர் அம்சங்கள்
இதனால், இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ள ஸ்டாலின், 100-வது நாளுக்கு முன்பாகவே 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் பெறப்பட்ட அத்தனை மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி, அதுமட்டுமின்றி, தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்ட முக்கியமானவற்றை பட்ஜெட்டில் அறிவித்திட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இருககிறார்.

பட்ஜெட்டில் எவை
அதனால் தான் ஆகஸ்ட் 13-ம் தேதியே தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாம். அப்போது பெண்கள் மற்றும் முதியோர்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகளும் இடம் பெற்றதாம். முதியோர் உதவித்தொகை உயர்வு, மாதம் தோறும் மின் கட்டணம் செலுத்தும்முறை, புதிய மாநகராட்சிகள்,பெண்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை போன்ற திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications