சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லி சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் இன்று சந்திப்பு!

Google Oneindia Tamil News

டெல்லி : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க டெல்லி செசன்றடைந்தார். இன்று காலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளின் போது அவரது படத்திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை அழைக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம்

தமிழக அரசின் பட்ஜெட் கூட்டம் விரைவில் கூடப்போகிறது. தற்போது துறை ரீதியிலான ஆய்வுக் கூட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார்.

அலறிய கிராமம்.. 8 உயிர்களை காவு வாங்கிய கிணறு.. தவறி விழுந்த சிறுமியை மீட்டபோது நடந்த துயரம்அலறிய கிராமம்.. 8 உயிர்களை காவு வாங்கிய கிணறு.. தவறி விழுந்த சிறுமியை மீட்டபோது நடந்த துயரம்

முதல்முறையாக முதல்வராக பதவியேற்றுள்ள ஸ்டாலின், தன்னுடைய இந்த ஐந்து ஆண்டு ஆட்சி காலத்தின் செயல்திட்டங்கள் பல காலம் பேசப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். அதற்கு தகுந்தாற்போல் பட்ஜெட்டை சிறப்பாக உருவாக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார். அதற்காகத்தான் பொருளாதார நிபுணர்கள்கள் குழுவை அமைக்கவும் உத்தரவிட்டார்.

அதிக வாய்ப்பு

அதிக வாய்ப்பு

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு நிபுணர்களுடன் ஆலோசித்து பட்ஜெட்டை உருவாக்கி வருகிறார். தமிழகத்தின் பட்ஜெட் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

ஸ்டாலின் திட்டம்

ஸ்டாலின் திட்டம்

அதன்பிற்கு கூட்டத்தொடரை தள்ளி வைப்பது என்றும், பட்ஜெட் மீதான விவாதத்தையும் அதனைத் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டிய மானிய கோரிக்கைகளையும் பிறகு வைத்துக் கொள்ளலாம் என்றும் முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு வருகிறாராம்.

ராம்நாத் கோவிந்த்

ராம்நாத் கோவிந்த்

பட்ஜெட் கூட்டத் தொடரின் போது சட்டமன்றத்தில் கலைஞரின் படத்தை திறக்கவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசுகிறார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழாவுக்கு தமிழகம் வர வேண்டும் என கோரிக்கை வைக்கவிருக்கிறாராம்.

கருணாநிதி நினைவு நாள்

கருணாநிதி நினைவு நாள்

அத்துடன், கலைஞரின் படத்திறப்பு விழாவுக்கு சோனியா காந்தி உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்களை அழைக்கவும் திட்டமிட்டிருக்கிறாரம் முதல்வர் ஸ்டாலின். எனவே திமுகவின் பழம்பெரும் தலைவரும், மறைந்த முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நினைவு தினமான ஆகஸ்ட் 7 ஆம் தேதி படத்திறப்பு விழா நடத்தப்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

உற்சாக வரவேற்பு

உற்சாக வரவேற்பு

முன்னதாக டெல்லி சென்றடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை புதுடெல்லியில் பொதிகை இல்லத்தில் தி.மு.க எம்.பி. டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக பிரமுகர்கள், அதிகாரிகள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இன்று காலை குடியசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசும் மு.க.ஸ்டாலின் இன்றே சென்னை திரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
According to sources, Stalin is planning to visit Delhi soon. During his visit to Delhi, Stalin has planned to invite President Ramnath Govind to attend the inauguration of former Chief Minister Karunanidhi's memorial day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X