“எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர் துரைமுருகன்” - திருமண விழாவில் ஸ்டாலின் பேச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்கியபோது துரைமுருகனை தனது கட்சிக்கு அழைத்தார். ஆனால் துரைமுருகனோ, "நீங்கள் எனது கல்விக்கு உதவி இருக்கலாம்.. என் மீது அன்பை பொழிந்திருக்கலாம்.. ஆனால் கொள்கை என்று வரும்போது, எனக்குத் தலைவர் கலைஞர்தான். நான் அவருடன் தான் இருப்பேன்" என்று கூறி, இன்று வரை திமுக-வில் இருக்கிறார். எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர் துரைமுருகன்" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

திமுக பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் பேத்தியும், கதிர் ஆனந்த் எம்.பியின் மகளுமான செந்தாமரை - தொழிலதிபரும் திரைப்பட தயாரிப்பாளருமான திட்டக்குடி ரவி கண்ணன் - தீபா தம்பதியரின் மகன் தீபக் ரவி இணையரின் திருமணம் இன்று நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

mk stalin

மு.க.ஸ்டாலின் பேசுகையில், "சட்டமன்றத்தில் அண்ணன் துரைமுருகனை எதிர்த்து பேசுவது என்பது அப்போது பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் ஆட்சியின்போது, அந்த ஆட்சிக்கு திமுக சார்பில் கா.சுப்பு, ரகுமான் கான், அண்ணன் துரைமுருகன் ஆகிய 3 பேர் சட்டமன்றத்தில் சிம்ம சொப்பனமாக விளங்கினர். இதனால் இவர்கள் சட்டமன்றத்திற்கு வரக்கூடாது என்று எம்.ஜி.ஆர். நடவடிக்கை எடுத்தார்.

எம்ஜிஆர் கண்டெடுத்து கலைஞர் வளர்த்தெடுத்தவர்தான் துரைமுருகன்.
புள்ளி விவரங்களோடு அரசியல் மேடைகளில் பேசும் ஆற்றலை
பெற்றவர் துரைமுருகன். மின்னல் என்ற தலைப்பிலே துரைமுருகன் பேசிய பேச்சுகள் தமிழ்நாட்டின் தெருக்களில் இன்றும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்கியபோது துரைமுருகனை தனது கட்சிக்கு அழைத்தார். ஆனால் துரைமுருகனோ, "நீங்கள் எனது கல்விக்கு உதவி இருக்கலாம்.. என் மீது அன்பையும், பாராட்டையும் பொழிந்திருக்கலாம்.. ஆனால் கொள்கை என்று வரும்போது, எனக்குத் தலைவர் கலைஞர்தான். நான் அவருடன் தான் இருப்பேன்" என்று கூறி, இன்று வரை திமுக-வில் இருக்கிறார்." எனப் பேசியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+