பேராசிரியர் க அன்பழகன் 100ஆவது பிறந்தநாள் விழா.... சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை : திமுக முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழனின் 100வது பிறந்த நாள் விழா திமுகவினரால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பேராசிரியர் க.அன்பழகனின் நினைவை போற்றும் வகையில் சென்னை நந்தனத்தில் மார்பளவு வெண்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நந்தனம் நிதித்துறை வளாத்தில் பேராசிரியர் க.அன்பழகன் சிலையை திறந்து வைத்த மு.க.ஸ்டாலின் அந்த வளாகத்திற்கும் க.அன்பழகன் பெயரை சூட்டியுள்ளார்.

இனமான பேராசிரியர் என கருணாநிதியால் பெருமிதத்தோடும், பேரறிஞர் அண்ணாவால் பேராசிரியர் தம்பி என்று அன்போடும் அழைத்து போற்றப்பட்டவர் க.அன்பழகன் தன்னுடைய கல்வி பயணத்தின்போது தந்தை பெரியாரின் சமூக சீர்திருத்த கொள்கைகளாலும், அண்ணாவின் தமிழ் உணர்வுமிக்க பேச்சாற்றலினாலம் ஈர்க்கப்பட்டு தன்னை பொதுவாழ்க்கையில் அர்ப்பணித்துக் கொண்டவர்.
அண்ணாவின் வேண்டுகோளை ஏற்று 1944ம் ஆண்டு முதல் 1957-ம் ஆண்டு வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணை பேராசிரியராக பணியாற்றியவர் க.அன்பழகன். இதனால் பேராசிரியர் க.அன்பழகன் என்றுதான் எல்லோரும் அன்புடன் அவரை அழைப்பர். 43 ஆண்டுகளாக திமுகவின் பொதுச்செயலாளராகப் பதவி வகித்து வந்த பேராசிரியர் க.அன்பழகன் 2020ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி தன்னுடைய 97வது வயதில் காலமானார்.
இந்நிலையில் திமுக முன்னாள் பொதுச்செயலாளர் மறைந்த பேராசிரியர் க.அன்பழகனின் 100ஆவது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது நினைவை போற்றும் வகையில் சென்னை நந்தனத்தில் உள்ள நிதித்துளை வளாகத்தில் மார்பளவு வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. இதையடுத்து பேராசிரியரின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு புதியதாக நிறுவப்பட்டுள்ள க.அன்பழகன் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும் நந்தனத்தில் செயல்பட்டுவரும் நிதித்துறை வளாகத்திற்கு "பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை" என பெயர் சூட்டியுள்ளார். இதுமட்டுமின்றி பேராசிரியர் க.அன்பழகனால் எழுதி நாட்டுடமையாக்கப்பட்ட 42 நூல்களுக்கு மாநில அரசின் ராயல்ட்டி தொலை 25 லட்சம் ரூபாயை அவரது குடும்பத்தாரிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த விழாவில் அமைச்சர்கள் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்களும் பங்கு பெற்றனர்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்!












Click it and Unblock the Notifications