"தமிழகத்தை திராவிட இயக்கங்கள்தான் ஆளும்!" செங்கோட்டையன் அதிரடி உரை! மேஜையை தட்டிய திமுக எம்எல்ஏக்கள்
சென்னை: தமிழகத்தை திராவிட இயக்கங்கள்தான் ஆளும் என அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் தெரிவித்தார். இதனை திமுக உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்றனர்.
தமிழக சட்டசபையில் பள்ளிக் கல்வித் துறை மீதான மானிய கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது கோபிசெட்டிபாளையம் எம்எல்ஏ செங்கோட்டையன் பேசினார்.
அவர் கூறுகையில் தமிழகத்தை திராவிட இயக்கங்கள்தான் ஆளும். வேறு எவராலும் தமிழகத்தை ஆள முடியாது என்றார். அப்போது திமுக உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆதரவு தெரிவித்தனர்.

பாஜக
தமிழகத்தை பாஜக ஆளும் என கூறி வரும் நிலையில் தேசிய அரசியலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அதிமுக தமிழகத்தை திராவிட இயக்கங்களை தவிர வேறு எவராலும் ஆள முடியாது என கூறியுள்ளது பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. இது பாஜகவினருக்கு அதிருப்தியையும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.

நகராட்சி தேர்தல்
நகராட்சி தேர்தலுக்கு முன்னர் அதிமுகவுடன் பாஜக கூட்டணியிலிருந்த போது திமுக வெர்சஸ் பாஜகவுக்குதான் போட்டி என்றும் திமுகவுக்கு மாற்று பாஜக என்றும் அதன் தலைவர்கள் கூறி வந்தனர். மேலும் அதிமுக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டையும் முன் வைத்திருந்தனர். பாஜகவின் நயினார் நாகேந்திரன் அதிமுக எம்எல்ஏக்களை தரக்குறைவாக பேசியிருந்தார்.

நீண்ட காலம்
இந்த நிலையில்தான் நகராட்சி தேர்தலில் பாஜகவுக்கு தொகுதியை ஒதுக்காமல் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜக தனித்து போட்டியிட்டது. நீண்ட காலத்திற்கு பிறகு அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் பாஜகவுக்கு 4 எம்எல்ஏக்கள் கிடைத்துள்ளனர் என்ற விமர்சனம் உள்ளது.

ராகுல் காந்தி
அதற்கு முத்தாய்ப்பாக தமிழகத்தை வேறு யாருமே அதாவது பாஜக ஆள முடியாது என்பதை மறைமுகமாக அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் கூறியிருப்பதும் அதை திமுகவினர் வரவேற்றதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தை பாஜக ஆளவே முடியாது என மக்களவையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு!












Click it and Unblock the Notifications