ரஜினியை தலைவா என புகழ்ந்த பிரதமர் மோடி - தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு வாழ்த்து
சென்னை: இந்திய திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு தாதா சாகேப் பால்கே விருதினை மத்திய அரசு அறிவித்துள்ளது. விருது பெற்ற ரஜினிக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார். தலைவாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் பதிவிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் தொடங்கி அண்ணாத்தே வரை நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக மகுடம் சூட்டப்பட்டுள்ள ரஜினிகாந்த் ஏற்கெனவே பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்ம விபூஷன் விருதுகளைப் பெற்றுள்ளார்.

ரஜினிக்கு திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. திரைப்படத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு கடந்த 1969ஆம் ஆண்டு முதல் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக அறிவித்தார்.

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார். தலைவாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரபலமான ஒரு சிலரின் பணிகளுக்கு பெருமை கொள்ளலாம். மாறுபட்ட பாத்திரங்கள், அன்பான ஆளுமை கொண்டவர் ரஜினிகாந்த் உங்களுக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது மகிழ்ச்சியளிக்கிறது வாழ்த்துக்கள் என்றும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.