அமெரிக்காவை அதிரவைக்கும் 'மர்ம ஹம்' சத்தம்.. வானில் தோன்றிய பச்சை நிற ஒளி! என்னங்க நடக்குது?
சென்னை: ஈரான் போர், அணு ஆயுதத்தை பயன்படுத்தும் அபாயம், உலகம் முழுக்க கச்சா எண்ணெய் சிக்கல், கச்சா எண்ணெய் காரணமாக லாக் டவுன் போட வாய்ப்பு, பில் கேட்ஸ் நடத்திய வானிலை ஆராய்ச்சி, என்று உலகம் முழுக்க பல்வேறு அதிர்ச்சி சம்பவங்கள் நடந்து வருகின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் அமெரிக்காவில் இன்னொரு அதிர்ச்சி சம்பவம் நடந்தேறி உள்ளது.
அமெரிக்காவின் பல மாகாணங்களில் இரவு நேரங்களில் கேட்கும் ஒரு விசித்திரமான ரீங்காரச் சத்தமும், வானில் மின்னிய பச்சை நிற ஒளியும் அந்நாட்டு மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. இது ஏலியன்களின் வருகையின் அறிகுறியா அல்லது ரகசிய ராணுவ சோதனையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த ஈரான் போர் தொடங்கிய போதே ஒரு பக்கம் conspiracy தியரி பேசக்கூடியவர்கள்.. விரைவில் ஏலியன் வர வாய்ப்புள்ளதாக வாதங்களை முன் வைத்தனர். இன்னும் சிலர் அமெரிக்கா புதிய ஆயுதங்களை பரிசோதனை செய்யலாம், அணு ஆயுதங்களை பரிசோதனை செய்யலாம் என்றும் வாதம் வைத்தனர். இப்படிப்பட்டநிலையில்தான் அமெரிக்காவில் அந்த அதிர்ச்சி சத்தம் கேட்டுள்ளது.
அந்த 'மர்ம ஹம்' (The Hum)!
அமெரிக்காவின் கனெக்டிகட் மற்றும் நியூஜெர்சி மாகாணங்களில் கடந்த சில வாரங்களாக மக்கள் தூக்கத்தைத் தொலைத்து நிற்கிறார்கள். காரணம், காதுகளுக்குள் இடைவிடாது ஒலிக்கும் அந்த 'ஹம்' சத்தம். "யாரோ ஒரு பெரிய இன்ஜினை ஸ்டார்ட் செய்து அப்படியே விட்டது போல இருக்கிறது. வீட்டின் தரை முதல் சுவர் வரை அதிருகிறது" எனப் புலம்புகிறார்கள் அங்கிருக்கும் தமிழர்கள் உள்ளிட்ட பொதுமக்கள்.
இதற்குப் பின்னால் ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி இருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவ, உள்ளூர் நிர்வாகம் அதிரடி விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால், உண்மை என்னவோ மிகவும் 'டெக்னிக்கலாக' இருக்கிறது. அண்மைக்காலமாக அதிகரித்து வரும் 'டேட்டா சென்டர்கள்' (Data Centers) தான் இதற்கு முக்கியக் காரணம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆயிரக்கணக்கான சர்வர்களைக் குளிர்விக்கப் பயன்படுத்தப்படும் ராட்சத ஃபேன்களின் அதிர்வுதான் இந்த மர்மச் சத்தத்தின் பின்னணி.
வானில் தோன்றிய அந்தப் பச்சை ஒளி!
சத்தம் ஒருபக்கம் இருக்க, கலிபோர்னியா வானில் திடீரெனத் தோன்றிய பிரம்மாண்ட பச்சை நிற ஒளிப்பந்து மக்களை மேலும் மிரட்டியது. "பறக்கும் தட்டு வந்துவிட்டது" என அலறியவர்களுக்கு விடை சொல்கிறார்கள் விண்வெளி ஆய்வாளர்கள். அது ஏலியன்களின் வாகனம் அல்ல; விண்வெளியில் இருந்து பூமிக்குள் நுழைந்த ஒரு 'பயர்பால்' (Fireball) எனப்படும் எரிநட்சத்திரம்.
இந்த விண்கல்லில் உள்ள நிக்கல் மற்றும் மெக்னீசியம் போன்ற உலோகங்கள் வளிமண்டல உராய்வினால் எரியும்போதுதான் அந்த வசீகரமான பச்சை நிறம் தோன்றுகிறது. சில இடங்களில் இது 'சோனிக் பூம்' (Sonic Boom) போன்ற வெடிச்சத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பின்னணி என்ன?
ஒரே நேரத்தில் சத்தமும், ஒளியும் தென்பட்டதால் மக்கள் குழப்பமடைந்தனர். ஆனால், சத்தம் பூமியில் இருக்கும் 'டேட்டா சென்டர்களால்' உருவானது; ஒளி விண்ணில் இருந்து வந்த 'விண்கல்லால்' உருவானது என்பதே தற்போதைய கள நிலவரம். எனினும், "அமெரிக்க அரசு எதையோ மறைக்கிறது" என அங்குள்ள Conspiracy Theorists பேசக்கூடிய நபர்கள் கிளப்பிவிடும் கிளுகிளுப்பான கதைகளுக்கு மட்டும் பஞ்சமே இல்லை!
-
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு! -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
Greenland: கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயார்.. டிரம்ப் விலைக்கு கேட்டு வந்த நிலையில் ஈரான் அதிரடி! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications