சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மகிழ்ச்சி! பேரறிவாளன் வேலூர் சிறையில் இருந்தது என்னால்தான் வெளியே தெரியும்! நாம்தமிழர் சீமான் தடாலடி

Google Oneindia Tamil News

சென்னை : பேரறிவாளன் விடுதலை செய்தி மகிழ்ச்சியை விட நம்பிக்கையை தருகிறது எனவும், பேரறிவாளன் உள்ளிட்ட மூவர் வேலூர் சிறையில் இருந்தது என்னால் தான் வெளியவே தெரியும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் போன்றோர் கடந்த 31 வருடங்களாக சிறையில் இருக்கின்றனர்.

அவர்களில் பேரறிவாளன் உடல்நலக் குறைவாள் பரோலில் வெளிவந்த நிலையில் , கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து தன்னை விடுவிக்கக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

“தம்பி பேரறிவாளன்.. நடந்து நடந்து அம்மா கால் தேஞ்சு போச்சு.. இனியாவது” - தீர்ப்பு குறித்து சீமான்!“தம்பி பேரறிவாளன்.. நடந்து நடந்து அம்மா கால் தேஞ்சு போச்சு.. இனியாவது” - தீர்ப்பு குறித்து சீமான்!

பேரறிவாளன் விடுதலை

பேரறிவாளன் விடுதலை

அதில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பையொட்டி பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக முதல்வர் ஸ்டால்னை சந்தித்து நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியையும் அவர்கள் நேரில் சந்தித்து நன்றி கூறினர்.

நாம் தமிழர் சீமான்

நாம் தமிழர் சீமான்

இதற்கிடையே பேரறிவாளன் விடுதலை செய்தி மகிழ்ச்சியை விட நம்பிக்கையை தருகிறது எனவும், பேரறிவாளன் உள்ளிட்ட மூவர் வேலூர் சிறையில் இருந்தது என்னால் தான் வெளியவே தெரியும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சென்னை பூந்தமல்லியில் வண்டலூர் - மீஞ்சூர் பைபாஸ் சாலையில், மே 18 இன எழுச்சி பொது கூட்டம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய சீமான் இதனை குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

நான் தான் காரணம்

நான் தான் காரணம்

கூட்டத்தில் பேசிய அவர், " முன்னதாக தமிழக அரசால் நான் கைது செய்யப்பட்ட போது 6 மாதகாலம் வேலூர் சிறையில் அடைபடுவதற்கு முன்பு, முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் வேலூர் சிறையில்தான் இருந்தார்கள் என்பது யாருக்காவது தெரியுமா? நான் வேலூர் சிறைக்கு செல்வதற்கு முன்பு என் தம்பிகளை மொத்தமாக 3000 பேர்தான் பார்த்திருந்தார்கள்.

Recommended Video

    Perarivalan முதல் நம்பிக்கை.. மற்ற 6 பேர் யார்? #Politics
    மகிழ்ச்சி தருகிறது

    மகிழ்ச்சி தருகிறது

    நான் சிறையில் இருந்த 6 மாதத்தில் அவர்களை சந்தித்தவர்கள் 50,000 பேர். அதற்கு பிறகுதான் இவர்கள் இவ்வளவு ஆண்டுகாலமாக சிறையில் இருக்கிறார்கள் என்பதே வெளியில் தெரியவந்துள்ளது. பேரறிவாளன் விடுதலை செய்தி மகிழ்ச்சியை விட நம்பிக்கையை தருகிறது. தொடர் சட்டம் மற்றும் அரசியல் போராட்டம் நடத்தினார். அவரே அவரது விடுதலையை சாத்தியபடுத்தினார். இந்த தீர்ப்பு அனைவருக்கும் பொருந்தும் அவர்களையும் விடுதலை செய்யவேண்டும். இதற்கு தனியாக போராட்டங்கள் செய்ய வைக்காதீர்கள்." என்றார்.

    English summary
    Seeman, the co-ordinator of the Naam Tamil Party, said the news of Perarivalan's release was more hopeful than happy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X