Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நான் உன்னை நீங்க மாட்டேன்... மோடி பற்றிய சர்ச்சைகளுக்குப் பின் இளையராஜா பாடல் - காரணம் என்ன?

பிரதமர் மோடிக்கு ஆதரவாக இளையராஜா கருத்து தெரிவித்த பின் ட்விட்டரில் அவர் தற்போது பதிவிட்டுள்ள வீடியோ மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் மோடி பற்றி பாராட்டி எழுதி சர்ச்சையான பின்னர் முதன் முறையாக பாடல் ஒன்றின் சில வரிகளைப் பாடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் இளையராஜா. தளபதி படத்தில் வரும் பாடலில் மாற்றங்கள் செய்து 'நான் உன்னை நீங்க மாட்டேன். நீங்கினால் தூங்க மாட்டேன் "பாடுவேன் உனக்காகவே... இந்த நாள் நன்னாள் என்று பாடு... என்னதான் இன்னும் உண்டு கூறு" என்று பாடியுள்ளார் இளையராஜா.

டெல்லியில் உள்ள புளூகிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் என்ற நிறுவனம், 'மோடியும் அம்பேத்கரும்: சீர்திருத்தவாதியின் சிந்தனையும் செயல்வீரரின் நடவடிக்கையும்' என்ற பெயரில் புத்தகம் ஒன்றை அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிட்டது.

இந்தப் புத்தகத்தின் முன்னுரையில், பிரதமர் மோடி அம்பேத்கருக்கு இணையானவர் என்றும் பிரதமர் மோடி ஆட்சியின் பல திட்டங்கள், அம்பேத்கரின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டவை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அம்பேத்கரும் இளையராஜாவும்

அம்பேத்கரும் இளையராஜாவும்

முத்தலாக் தடைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் மூலமாக நிகழ்ந்த சமூக மாற்றங்களை நினைத்து அம்பேத்கர் பெருமைப்பட்டிருப்பார்" எனவும் கூறியிருந்தார். இரண்டு பக்கங்களில் எழுதப்பட்டிருந்த இளையராஜாவின் முன்னுரை கடந்த சில நாள்களாக கடும் விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கிறது. மோடியை அம்பேத்கருடன் ஒப்பிடுவது முற்றிலும் தவறானது'' என கூறி பெரிய சர்ச்சையே வெடித்து, தற்போது சற்றே அடங்கியிருக்கிறது.

இளையராஜாவிற்கு எதிர்ப்பு

இளையராஜாவிற்கு எதிர்ப்பு

இளையராஜாவின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இளையராஜாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துகள் இணையத்தில் அனல் பறந்தது. இளையராஜாவை யாரும் விமர்சிக்க வேண்டாம் என அரசியல் கட்சியின் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

Recommended Video

    2 முறை Ilayaraja-விற்கு பறந்த GST சம்மன் | Oneindia Tamil
    இளையராஜாவிற்கு மோடி நன்றி

    இளையராஜாவிற்கு மோடி நன்றி

    பிரதமர் மோடி இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது. தன்னைப் பற்றி 'மோடியும் அம்பேத்கரும்' என்ற புத்தகத்தில் அணிந்துரை எழுதியதற்காக இளையராஜாவை தொலைபேசியின் மூலம் தொடர்புகொண்டு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இளையராஜா பாடல் ட்வீட்

    இந்த நிலையில் நான் உன்னை நீங்க மாட்டேன். நீங்கினால் தூங்க மாட்டேன்' என்ற தளபதி படத்தின் தனது குரலில் ஒலிக்கும் பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அசல் பாடல் வரிகளில் சில மாற்றங்களைச் செய்து, "பாடுவேன் உனக்காகவே... இந்த நாள் நன்னாள் என்று பாடு... என்னதான் இன்னும் உண்டு கூறு" என்று வரிகளைச் சேர்த்துப் பாடியிருக்கிறார் இளையராஜா.

    நெட்டிசன்கள் பதிவு

    நெட்டிசன்கள் பதிவு

    இளையராஜாவின் இந்த ட்வீட்க்கும் கலவையான கமெண்ட்களை நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

    வசை வருதோ பாண்டி நாட்டினிலே - குழலி
    மணவாளனே உனது வீட்டினிலே
    உயிர் மயக்கம் நாதப் பாட்டினிலே..!

    வேருக்கு நீரூற்றி விளைக்கின்ற தலைவா - உன்
    பேருக்கு பழி நேர்ந்தால் உனக்கின்றி எனக்கில்லை!

    இறைவா
    இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை
    நீ
    இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை..?! என்று ஒரு நெட்டிசன் பதிவிட்டுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+