பிரபல "விஐபி" மனைவி? இதைவிடுங்க, நாகர்கோவில் காசியின் நண்பரை சுற்றி வளைத்த போலீஸ்.. நிஜம் வெளிவருதா?
சென்னை: நாகர்கோவில் காசியின் நண்பன் போலீசில் சிக்கி உள்ளது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. இது தொடர்பான விசாரணையையும் போலீசார் தீவிரப்படுத்தி வருகிறார்கள்.
தமிழகத்தையே உலுக்கிய வழக்கு நாகர்கோவில் காசியின் பாலியல் வழக்காகும்.. 26 வயதிலேயே வாழ்க்கையின் உயரத்துக்கும் சென்றவர்.. அதே 26 வயதிலேயே சிறைக்கும் சென்றுவிட்ட பட்டதாரி இளைஞன்.. வசதியான குடும்ப பின்னணியும், அளவுக்கு அதிகமான செல்லமும், பிஞ்சு வயதிலேயே காசியை படுகுழியில் தள்ளிவிட்டது.

கல்லூரி மாணவிகள், பள்ளி மாணவிகள், தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் இளம்பெண்கள், வசதியான குடும்ப பெண்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை, தன் வலையில் சாய்த்து ஆபாச வீடியோக்களையும் எடுத்துள்ளார் காசி.
ஆடம்பர வாழ்க்கை: அதே வீடியோக்களை காரணம் காட்டி, சம்பந்தப்பட்ட பெண்களிடம் லட்சக்கணக்கில் பணத்தையும் கறந்துள்ளார்... 4 மாடி வீடு, நிறைய நிலங்களையும் வாங்கி போட்டுள்ளார் காசி.
எஸ்ஐ மகள் ஒருவரையும், ஒரு பிரபல நடிகரின் மகளும், காசியின் பிடியில் விழுந்துவிட்டதாக சொன்னார்கள்.. அதேபோல, ஒரு அரசியல்வாதி மனைவியும் இவரது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் சொன்னார்கள்.. ஆனால், அவர்கள் எல்லாம் யார் என்று கடைசிவரை தெரியவில்லை..
ஆபாச படங்கள்: 141 பெண்கள் வரை காசியால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 2020ல் கைது செய்யப்பட்ட காசியிடமிருந்து 410 வீடியோக்கள், 1,900 ஆபாசப் படங்கள் காசியின் லேப்டாப்பில் கைப்பற்றப்பட்டன. நாகர்கோவில் மகளிர் கோர்ட் காசிக்கு கடந்த ஜூன் 14ல் தீர்ப்பளித்தது. அதில் காசிக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்தது.
காசியின் வழக்கு பரபரப்பாக நடந்து கொண்டிருந்தபோதே, நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காசியின் நண்பர் ராஜேஷ் சிங் என்பவர் மீது இளம்பெண் ஒருவர் புகார் தந்திருந்தார்.. ராஜேஷூம தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் புகார் கூறியிருந்தார்..
ராஜேஷ்: ராமன்புதூரை சேர்ந்த ராஜேஷுக்கு 43 வயதாகிறது.. எனவே, இவர் மீதும் பாலியல் துன்புறுத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன், ராஜேஷை கைது செய்யவும் சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்... ஆனால், இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், ராஜேஷ் சிங் துபாய்க்கு சென்றதால் அவரை கைது செய்ய முடியவில்லை.. எனவே, ராஜேஷ் கைது தொடர்பாக அனைத்து விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸும் அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில், 3 வருடங்கள் கழித்து, துபாயில் இருந்து ராஜேஷ் நேற்று சொந்த ஊருக்கு திரும்பினார்.. சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கியதுமே, அவரை சிபிசிஐடி போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.. இதை ராஜேஷ் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
கிடுக்கிப்பிடி: ராஜேஷை நாகர்கோவிலுக்கு அழைத்து வந்து, அவரிடம் 3 மணி நேரத்திற்கு மேலாக கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர் போலீசார்.. இப்போது ராஜேஷ் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.. அந்தவகையில், விரைவில் ராஜேஷிடம் விசாரணை நடக்க உள்ளது.. காரணம், பாதிக்கப்பட்ட பெண், அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் ராஜேஷ்சிங்கிடம் விசாரணை நடத்தப்பட வேண்டி இருக்கிறதாம்.. இனி நடத்த போகும் விசாரணையில், இந்த கும்பலின் பாலியல் அக்கிரமங்கள் குறித்த தகவல்கள் மேலும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications