"வசனம் பேசும் விஜய்".. தவெக நிர்வாகி மீது ஆபாச வீடியோ புகார்.. நடவடிக்கை கோரிய நயினார் நாகேந்திரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் மீது இளம்பெண் அளித்துள்ள பாலியல் மற்றும் மிரட்டல் புகார்கள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன. பலமுறை புகார் அளித்தும் இதுவரை கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், விஜய் மோகன் மீது உடனடியாக சட்டரீதியாகவும் கட்சி ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது: கட்சியில் பதவி வாங்கித் தருவதாகக் கூறி தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுவதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தனது பெண் குழந்தையையும் பாலியல் ரீதியாக விமர்சித்ததாகவும் தவெகவின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் மீது, இளம்பெண் ஒருவர் அளித்துள்ள புகார்கள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.

nainar-nagendran-demands-action-against-tvk-functionary-vijay-mohan

அதுமட்டுமன்றி, பாதிக்கப்பட்ட பெண் பலமுறை புகார் அளித்தும் கூட இதுவரை விஜய் மோகன் கைது செய்யப்படவில்லை என்று வெளியாகியுள்ள தகவல், தமிழகக் காவல்துறையின் நேர்மையின் மீதும், அதை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இயக்கும் முதல்வரின் நிர்வாகத் திறன் மீதும் கடும் சந்தேகத்தை எழுப்புகிறது.

எனவே, தனது சொந்தக் கட்சிக்குள் இத்தனை காமுகர்களை பாதுகாத்து வைத்துக் கொண்டு, பெண்களின் பாதுகாப்பைப் பற்றி பக்கம் பக்கமாக வசனம் பேசுவதில் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை என்பதை முதலமைச்சர் ஜோசப் விஜய் உணர வேண்டும். பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய தவெக நிர்வாகி விஜய் மோகன் மீது உடனடியாக சட்டரீதியான மற்றும் கட்சி ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+