Nakkeeran Survey: ஆல் ஏரியாலயும் திமுக கில்லி.. அடிச்சு தூக்கும் ஸ்டாலின்! டஃப் கொடுத்த அதிமுக! நக்கீரன் சர்வே ரிசல்ட்
சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 234 தொகுதிகளுக்கான நக்கீரனின் மாவட்ட வாரியான கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இந்த கணிப்பின் படி, திமுக கூட்டணி சுமார் 175 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாகவும், அதிமுக சுமார் 52 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 7 தொகுதிகளில் இழுபறி நீடிப்பதாகவும் இந்த கணிப்பு சொல்கிறது. மாவட்ட வாரியாகப் பார்க்கப்படும் போது, அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலும் திமுகவே முன்னிலையில் உள்ளது.
வடதமிழக மாவட்டங்களை எடுத்துப் பார்த்தால், இங்கு திமுக மிக வலுவான நிலையில் இருப்பது இந்த கருத்து கணிப்பில் தெரிகிறது. குறிப்பாக நகர்ப்புற மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஆளும் கட்சிக்கு ஆதரவு அதிகம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற நகர் பகுதிகளில் திமுக பெரும்பான்மை ஆதரவைப் பெறும் சூழ்நிலை இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களிலும் திமுக முன்னிலையில் உள்ளதை இந்த கணிப்பு சுட்டிக்காட்டுகிறது.
நக்கீரன் சர்வே
ஆனால் விழுப்புரம், கடலூர் போன்ற சில பகுதிகளில் அதிமுக இன்னும் போட்டியை தக்க வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு தமிழகம் பாரம்பரியமாக அதிமுக வலுவாக இருக்கும் கொங்கு பெல்ட் என்று சொல்லப்படும் பகுதி. இந்த கணிப்பும் அதையே ஓரளவிற்கு உறுதி செய்கிறது. சேலம் மற்றும் கோயம்புத்தூர் போன்ற முக்கிய தொழில்துறை மாவட்டங்களில் அதிமுக வலுவான போட்டியை உருவாக்கும் நிலை உள்ளது. இந்த பகுதிகளில் ஆட்சிக்கு எதிரான மனநிலை சில இடங்களில் காணப்படுவதாகவும், அதனால் அதிமுகவுக்கு ஆதரவு இன்னும் உள்ளது.
திமுக முன்னிலை
அதே நேரத்தில் ஈரோடு, நாமக்கல், நீலகிரி போன்ற பகுதிகளில் கலவையான நிலை காணப்படுகிறது. சில தொகுதிகளில் திமுக முன்னிலை இருந்தாலும், அதிமுக கடுமையான சவாலை உருவாக்கும் வாய்ப்பு இருப்பதாக இந்த கணிப்பு தெரிவிக்கிறது.
காவிரி டெல்டா
காவிரி டெல்டா பகுதிகளைப் பார்த்தால், இது பாரம்பரியமாக திமுக வலிமையாக உள்ள பகுதியாகக் கருதப்படுகிறது. திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் போன்ற மாவட்டங்களில் திமுக ஆதரவு தொடர்ந்து வலுவாக இருப்பதாக இந்த கருத்துக்கணிப்பு கூறுகிறது. விவசாயம் சார்ந்த பகுதிகளில் அரசின் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில் சில இடங்களில் கடும் போட்டி இருந்தாலும், பெரும்பான்மை திமுக பக்கம் செல்லும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் தெற்கு மாவட்டங்கள்
மத்திய மற்றும் தெற்கு மாவட்டங்களிலும் திமுக வெற்றி தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் பெரும்பாலான தொகுதிகள் திமுக பக்கம் செல்லும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் போன்ற பகுதிகளிலும் திமுக முன்னிலை நிலை உள்ளது. ஆனால் தூத்துக்குடி போன்ற சில மாவட்டங்களில் கடுமையான நேரடி போட்டி உருவாகும் எனவும், அங்கு இரு கட்சிகளுக்கும் சமமான வாய்ப்பு இருக்கலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்கள்
தெற்கு மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி பகுதிகளிலும் திமுக தான் முன்னிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற வடமேற்கு மாவட்டங்களில் கடுமையான போட்டி உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
நக்கீரன் சர்வே ரிசல்ட்
இந்த கருத்துக்கணிப்பின் எண்ணிக்கைகள் உண்மையாக மாறினால், திமுக மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் வாய்ப்பு அதிகம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால் மேற்கு பெல்ட் மற்றும் சில குறிப்பிட்ட தொகுதிகளில் அதிமுக இன்னும் வலுவான சவாலை உருவாக்கும் என்பது இந்த கணிப்பின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications