சாமி இல்லை.. அதனால்தான் சாத்தான்கள் உலா வருகின்றன.. தினகரன் மீது பாயும் "அம்மா"
டிடிவி தினகரனை விமர்சித்து நமது அம்மா நாளிதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது.
சென்னை: ஜெயலலிதா என்னும் சாமி இல்லாத குறை இருப்பதால்தான் உங்களை போன்ற சாத்தான்கள் உலா வர காரணமாகி விட்டதாக டிடிவி தினகரனை நமது அம்மா நாளிதழ் கடுமையாக விமர்சித்துள்ளது.
சமீப காலமாகவே நமது அம்மா நாளிதழுக்கும் டிடிவி தினகரனுக்கும் முட்டல் மோதலாகவே இருந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நமது அம்மா இதழை "நமது பாட்டி" என்று டிடிவி தினகரன் சொல்ல, அதற்கு கொதித்தெழுந்த அதிமுகவினர், "அம்மாவின் திருப்பெயரை பாட்டி என்று பழிப்பதா? 10 வருடம் அரசியலில் ஒதுக்கி வைத்தமைக்கு மறைந்த பிறகும் "அம்மா"வை பழிவாங்க முற்படும் தினகரனே மன்னிப்பு கேள்" என கண்டனம் தெரிவித்திருந்தது.

டிடிவி கருத்து
தற்போது அடுத்த விவகாரம் ஆரம்பித்துள்ளது. சர்கார் படம் குறித்து டிடிவி தினகரன் கருத்து தெரிவித்திருந்தார். அதில், "அம்மா இருந்தபோது இந்த படத்தை எடுத்திருந்தால் அவர்களை வீரர்களாக கருதலாம்.. மறைந்த தலைவர்களைப் பற்றி இதுபோன்று எல்லாம் படம் எடுப்பது நாகரிகமா?" என்று கேள்வி எழுப்பி விமர்சித்திருந்தார்.

அம்மா நாளிதழ்
டிடிவி தெரிவித்திருந்தது சர்க்கார் படத்தை பற்றின தன் கருத்தைதான். ஆனால் அம்மா நாளிதழோ டிடிவியை சாடி உள்ளது. " சாமி இல்லாத குறையால் சாத்தான் போடுது ஆட்டம்..."என்கிற தலைப்பில் ஒரு கட்டுரையும் வெளியிட்டுள்ளது.

மிஸ்டர் திகார்
அந்த கட்டுரையில், "வாஸ்தவம் தான் மிஸ்டர் திகார்... நீங்க கூட அம்மா உயிரோடு இருந்திருந்தா இப்படி ஆமமூக்கன் கட்சின்னு ஆரம்பிச்சு அம்மா உயிருருக ஊரெல்லாம் பிரச்சாரம் செய்து செயிக்க வச்ச பதினெட்டு பேரு பதவியை ‘பனால்' ஆக்கி விட்டிருப்பீங்களா..?

துணிச்சல் வருமா?
அதேபோல அம்மா உயிரோடு இருந்திருந்தா பசும்பொன்னுக்கு போய் அம்மா பேனரை ஆள் வைச்சு கிழிக்கிற திமிரு உங்களுக்கு வந்திருக்குமா..? அது மட்டுமா அம்மா உயிரோடு இருந்திருந்தா அம்மாவை பாட்டி, கொள்ளுபாட்டின்னு கேலி கிண்டல் பண்ணுற துணிச்சல் உங்களுக்கு வந்திருக்குமா..? அதையெல்லாம் விடுங்க அம்மா மட்டும் உயிரோடு இருந்திருந்தா பாண்டிச்சேரியில் உள்ள பதுங்கு குழியை விட்டுத்தான் நீங்க வெளியே வந்திருப்பீங்களா..?

சாமி இல்லாத குறை
என்ன பண்றது எல்லாம் அந்த ஒரு சாமி இல்லாத குறைதான் உங்களைப்போல இத்தனை சாத்தான்கள் உலா வர காரணமாப்போச்சே" இவ்வாறு அந்த கட்டுரை வெளியாகி உள்ளது. இதற்கு டிடிவி எனன் பதில் சொல்ல போகிறாரோ? பார்ப்போம்!
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications