பட்டியலின மக்கள் மதம் மாறினால் எஸ்சி இல்லை! சாதி சான்றிதழ் செல்லாது! அதிரடியாய் சொன்ன அருண் ஹால்தர்!
சென்னை : பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் மதம் மாறும் பொழுது தானாக பட்டியலினத்தில் இருந்து வெளியேறுகின்றனர். அவர்களுக்கு பட்டியலினத்தை சார்ந்தவர் என்று சாதி சான்றிதழ் இருந்தால் அது செல்லாது என தேசிய பட்டியலின ஆணைய துணைத்தலைவர் அருண் ஹால்தர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் பட்டியலின மக்களுக்கு சுடுகாடு செல்ல தனிப்பாதை உள்ள முறை மாற்றப்பட வேண்டும், மற்றும் மதம் மாறியவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டுமென தமிழகத்தில் நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக கிருஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியலின மக்களுக்கு தாழ்த்தப்பட்டவர்கள் (எஸ்.சி) என சான்றிதழ் வழங்க வேண்டுமென பல்வேறு கட்சிகள், அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. ஆனால் அதற்கு சட்டத்தில் இடமில்லை என கூறப்படுகிறது.

பட்டியலின ஆணைய துணைத்தலைவர்
இந்நிலையில் தேசிய பட்டியலின ஆணைய துணைத்தலைவர் அருண் ஹால்தர், சென்னை வந்து தேசிய பட்டியலின ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட புகார்கள் குறித்து விசாரணை நடத்தினார். அப்போது பேசிய அவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் மதம் மாறும் பொழுது தானாக பட்டியலினத்தில் இருந்து வெளியேறுகின்றனர் எனக் கூறியுள்ளார்.

200 புகார்கள்
விசாரணைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," "கடந்த ஒன்றரை வருடத்தில் தேசிய பட்டியலின ஆணையத்திற்கு 200 புகார்கள் வந்துள்ளன. இதில் 100 வழக்குகள் விசாரிக்கப்பட்டு, அவற்றில் இதுவரை 60 வழக்கு தீர்வுக்காணப்பட்டு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் முதலிடம்
பட்டியலின மக்களின் மீது நிகழும் வன்முறைகளில் இந்தியாளவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் ராஜஸ்தான் மாநிலம் உள்ளது. தமிழ்நாட்டில் இன்றும் பல இடங்களில் பட்டியலின மக்கள் சுடுகாடு செல்வதற்கு தனி பாதை உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இது குறித்தான விழிப்புணர்வை மக்களுக்கு அரசு ஏற்படுத்த வேண்டும்.

சாதி சான்றிதழ் செல்லாது
பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் மதம் மாறும் பொழுது தானாக பட்டியலினத்தில் இருந்து வெளியேறுகின்றனர். அவர்களுக்கு பட்டியலினத்தை சார்ந்தவர் என்று சாதி சான்றிதழ் இருந்தால் அது செல்லாது. மதம் மாறியவர்களுக்கு பட்டியலின வகுப்பு சான்றிதழ் வழங்கப்பட்டால் அது போலி சான்றிதழ் ஆகும். இது குறித்தும் பல புகார்கள் ஆணையத்திற்கு தொடர்ந்து வருகிறது." என கூறியுள்ளார்.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications