நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு! டவுன்லோடு செய்வது எப்படி? இதோ வழிமுறைகள்
சென்னை: நீட் தேர்வு 2025 ஆம் ஆண்டுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. வரும் 4 ஆம் தேதி இளநிலை நீட் தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் இன்று ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி எனும் பல் மருத்துவ படிப்புகளுக்கு "நீட்' நுழைவுத்தேர்வு" எழுத வேண்டும். தேசிய தேர்வு முகமையால் (என்.டி.ஏ) இந்த நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு நீட் தேர்வு மூலமாக மாணவர்கள் சேர்க்கையானது நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு நடந்து வருகிறது. மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்காக பல லட்சக்கணக்கான மாணவர்கள் இதற்காக தயாராகி வருகிறார்கள். அந்த வகையில் நடப்பு 2025- 2026 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கு நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.
மொத்தம் 20 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தேர்வு எப்போது நடைபெறும் என தேர்வர்கள் பலரும் காத்திருந்த நிலையில், வரும் மே 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இதற்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் வரும் மே மாதம் 4 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மதியம் 2.00 மணிக்கு இந்த தேர்வு நடைபெற இருக்கிறது. இதற்காக இன்று ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications