Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காது கேக்காத மகனுக்கு ஆபரேஷன்.. நீயா நானாவில் தமிழக அரசின் இலவச காப்பீட்டை பாராட்டிய வடமாநில பெண்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் காப்பீட்டுத் திட்டம் இல்லை என்றால் இன்று என் மகன் காது கேளாமலும் வாய் பேச முடியாமலும்தான் இருந்திருப்பான் என வடமாநில தொழிலாளி பெண் நீயா நானாவில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

நீயா நானா எனும் விவாத நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கருப்பொருள்கள் விவாதத்திற்குள்ளாக்கப்படும். இந்த நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதற்கான ப்ரோமோ நேற்றைய தினம் வெளியானது. இதில் வடமாநில தொழிலாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையேயான பிரச்சினை குறித்து பேசப்பட்டது.

வடமாநில தொழிலாளி

வடமாநில தொழிலாளி

பொதுவாக வடமாநில தொழிலாளி என்றாலே அவர்களை மிகவும் குறுகிய எண்ணத்துடன் பார்க்கும் எண்ணம் எழுந்துள்ளது. வடமாநிலங்களில் அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏதும் இல்லாததால் புலம் பெயர்ந்து பல்வேறு மாநிலங்களில் தங்களுக்கு ஏற்ற வேலைகளை செய்து வருகிறார்கள். இவர்கள் கட்டடம் கட்டும் பணிகள், ஹோட்டல் தொழில், கறி கடைகள், காவலர் பணி, டீக் கடை, சிவில் பணிகள், கூலித் தொழிலாளிகள், துணிக் கடைகள், வீட்டு வேலை உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஐடி கம்பெனி

ஐடி கம்பெனி

இவர்களில் படித்தவர்கள் என்றால் தகவல் தொழில்நுட்ப பிரிவுகளில் பணியாற்றி வருகிறார்கள். அந்தந்த மாநில தொழிலாளர்களை இந்த பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்றால் அவர்கள் அதிக அளவில் ஊதியம் கேட்பார்கள். வெளியூர்காரர்கள் என்றால் குடும்பத்தை பார்க்க மாதம் ஒரு முறை விடுமுறை கேட்பார்கள். ஆனால் வடமாநிலத்தவர்கள் குறைந்த ஊதியம் கொடுத்தாலே போதும் அதிக நேரம் வேலை செய்கிறார்கள். 6 மாதங்களுக்கு ஒரு முறை ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே ஊருக்கு செல்வார்கள்.

உரிமையாளர்கள்

உரிமையாளர்கள்

வடமாநிலத்தவர்களுக்கு தங்குவதற்கு உரிமையாளர்கள் கொடுக்கும் இடம் கூட அடிப்படை வசதிகள் கூட இருக்காது. தண்ணீர் பிடிக்க நீண்ட தூரம் தேடி செல்ல வேண்டிய நிலை இருக்கும். இப்படியாக இவர்கள் கஷ்டப்பட்டு வரும் நிலையில் யாரோ ஒரு சில வடமாநில தொழிலாளர்கள் செய்யும் தவறுக்காக எல்லாரையும் திருடர்கள், பலாத்கார பேர்வழிகள், கொள்ளையர்கள் என நினைத்தால் எப்படி, அந்தந்த மாநிலங்களில் திருடர்களே இல்லையா, அதற்காக நாம் அந்த மாநில மக்களை திருடர்களாகவும் கயவர்களாகவுமா கருதுகிறோம்.

மொழி விவகாரம்

மொழி விவகாரம்

இது போல் மொழி விவகாரத்திலும் இவர்கள் அவமதிக்கப்படுகிறார்கள். இந்தி மொழி பேசும் இவர்களை திட்டுவதற்காக மக்கள் சிலர் மாநில மொழிகளை பயன்படுத்துகிறார்கள். சிரித்துக் கொண்டே திட்டுவதால் அவர்களும் பாவம் அர்த்தம் புரியாமல் சிரிப்பார்கள். இப்படியான நிலை உள்ளது. இந்த நிலையில் நீயா நானா நிகழ்ச்சியில் வடமாநில தொழிலாளி வெர்சஸ் பொதுமக்கள் என்ற டாப்பிக் குறித்து பேசப்பட்டுள்ளது.

சங்கடப்படுத்தும் விஷயம்

சங்கடப்படுத்தும் விஷயம்

அதில் தமிழகத்தில் சங்கடப்படும் விஷயங்கள் என்ன என கோபிநாத் கேட்டதற்கு, ஒருவர் பேச்சுலர்களுக்கு வீடு தரமாட்றாங்க என்றார். அவர்களுடைய வீட்டில் நகை காணாமல் போனால் இந்திகாரன் வேலையா இருக்கும் என்பார்கள் என ஒரு பெண் சொல்கிறார். அது போல் தமிழகம் குறித்து எதை பெருமையாக சொல்வீர்கள் என கோபிநாத் கேட்டார். அதற்கு வடமாநிலத்தவர் ஒருவர் தமிழகத்தில் கல்வி குறித்து நான் எங்கள் மாநிலத்தில் பெருமையாக சொல்வேன். தமிழகத்தில் எல்லாரும் படிக்கிறார்கள், நாமும் முன்னேற வேண்டும் என்பேன். பிறகு வீட்டில் பெண்களை வேலை அனுப்ப மாட்டார்கள், அது கவுரவ குறைச்சலாக வடமாநிலத்தவர்கள் நினைப்பார்கள். ஆனால் தமிழகத்தில் பெண்களும் வேலைக்கு போகிறார்கள் என்பதை பெருமையாக சொல்வேன் என்கிறார்.

காது கேளாத குழந்தை

காது கேளாத குழந்தை

அது போல் ஒரு வடமாநிலத்து பெண் பேசுகையில் என் குழந்தைக்கு ஒரு வயது இருக்கும் போது பக்கத்து வீட்டில் இருந்த தமிழ் பேசும் அக்கா ஒருவர் உன் குழந்தை அம்மா, அப்பா சொல்லுதானு கேட்டாங்க. நான் இன்னும் இல்லை என்றேன். அப்போது அவன் விளையாடும் போது நீ ஏதாவது ஒரு பொருளை கீழே போடும் அந்த சப்தம் கேட்டு திரும்புகிறானா என பார் என்றார். நானும் அதுபடி செய்தேன். ஆனால் என் குழந்தை அந்த சப்தம் கேட்டு திரும்பவே இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்தேன். அந்த அக்காவிடம் சொன்னேன், அவர் போய் மருத்துவரை பார் என்றார்.

இலவச அறுவை சிகிச்சை

இலவச அறுவை சிகிச்சை

மருத்துவரை பார்த்தபோது உன் மகனுக்கு பேச முடியாது, காது கேக்காது என்றார்கள். ஏதாவது செய்ய முடியுமா என கேட்டேன். ஆபரேஷன் செய்தால் குணமாகும் என்றார்கள். ஆனால் ஆபரேஷனுக்கு ரூ 6 லட்சம் வரை செலவாகும் என்றார்கள். நான் சொல்வது 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு முன்பு. என்னால் அவ்வளவு பணம் செலவு செய்ய முடியாது என்றேன். உடனே அந்த டாக்டர் தமிழகத்தில் இலவச மருத்துவ காப்பீடு அட்டை இருக்கிறது. அதை வாங்கி வா, இலவசமாக ஆபரேஷன் செய்யலாம் என்றார். மேலும் 6 வயதுக்குள் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும் மருத்துவர் கூறி அனுப்பினார். இதையடுத்து 4 வருடங்கள் அலைந்து திரிந்து அந்த கார்டை வாங்கினேன். பிறகு அந்த மருத்துவமனையில் கொடுத்து என் மகனுக்கு ஆபரேஷன் செய்தார்கள். தற்போது என் மகன் நன்றாக பேசுகிறான். ஒரு பைசா செலவில்லாமல் ஆபரேஷன் செய்தார்கள். என் மாநிலத்தில் கூட இப்படி நடந்திருக்காது. அதனால் என் மகன் பேசுவதற்கு காரணம் தமிழக அரசுதான். நான் எப்போதும் நன்றியோடு இருப்பேன் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+