கூட்டணி தர்மம்.. கட்டளையிட்ட ஸ்டாலின் - ராஜினாமா செய்த நெல்லிக்குப்பம் ஜெயப்பிரபா.. விசிக ஹேப்பி
நெல்லிக்குப்பம் நகர்மன்றத் துணைத் தலைவராகத் தேர்வுபெற்ற ஜெயபிரபா அவர்கள், தமிழக முதல்வரின் ஆணையை ஏற்று பதவி விலகினார்
சென்னை: நெல்லிக்குப்பம் நகராட்சி துணைத் தலைவராகத் தேர்வுபெற்ற ஜெயபிரபா தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணையை ஏற்று பதவி விலகினார். இதனை தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த மாதம் 19ஆம் தேதி நடைபெற்றது. 22ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் மார்ச் 2ஆம் தேதி பதவியேற்றனர். மார்ச் 4ஆம் தேதியன்று மறைமுகத் தேர்தல் நடைபெற்றது.
கடலுார் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவி பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. மொத்தமுள்ள 30 வார்டுகளில் திமுக - 11, விடுதலை சிறுத்தைகள்- 2, காங்கிரஸ்- 1, முஸ்லிம் லீக் - 1, மனித நேய மக்கள் கட்சி - 1, தமிழக வாழ்வுரிமை கட்சி - 1, மதிமுக - 1 உட்பட திமுக கூட்டணி 18 இடங்களை வெற்றி பெற்றது. சுயேச்சைகள் - 7, தேமுதிக - 1, அதிமுக - 3, பாமக - 1 இடங்களை பிடித்தன. இதில், மூன்று சுயேச்சைகள் திமுகவில் இணைந்ததால் கூட்டணி பலம் 21ஆக உயர்ந்தது.

நெல்லிக்குப்பம் மறைமுக தேர்தல்
நகராட்சித் தலைவர் பதவி திமுகவை சேர்ந்தவருக்கு கிடைக்கும் என கட்சியினர் நம்பிக்கையாக இருந்தனர். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் தலைவர் பதவியை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக தலைமை ஒதுக்கியது. இதனால், திமுக நிர்வாகிகள் அதிருப்தியில் இருந்து வந்த நிலையில் போட்டி வேட்பாளராக ஜெயந்தி ராதாகிருஷ்ணன் களமிறங்கி 23 ஓட்டுகள் பெற்றார்.

விசிக வேட்பாளர் தோல்வி
விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர்மன்ற உறுப்பினர் கிரிஜா திருமாறன் 3 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். 3 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. பின்னர் துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் மதியம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தி.மு.க. நகர செயலாளர் மணிவண்ணனின் மனைவியும், 3-வது வார்டு கவுன்சிலருமான ஜெயபிரபா என்பவர் போட்டியிட மனு தாக்கல் செய்தார். அப்போது அவருக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஏற்கனவே தலைவர் பதவியில் தோல்வி கண்ட கிரிஜா திருமாறன் போட்டியிட்டார்.

திமுக ஜெயப்பிரபா வெற்றி
இதில் 29 கவுன்சிலர்களும் பங்கேற்றனர். இதில், 22 ஓட்டுகளை ஜெயபிரபா மணிவண்ணன் பெற்றார். கிரிஜா திருமாறனுக்கு 6 ஓட்டுகள் கிடைத்தது. ஒரு ஓட்டு செல்லாதவை என அறிவிக்கப்பட்டது. ஜெயபிரபா நகரமன்ற துணைதலைவராக வெற்றி பெற்றார். இதற்கான சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டதை அடுத்து, அவர் துணைதலைவராக பதவி ஏற்றுக்கொண்டார்.

சாலை மறியல்
இந்த நிகழ்வு குறித்து நெய்வேலி எம்எல்ஏ சபா ராஜேந்திரன் நெல்லிக்குப்பம் வந்து விசாரணை மேற்கொண்டார். அப்போது அவர் துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்யச் சொன்ன போது ஜெயபிரபா மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எம்எல்ஏ சபா ராஜேந்திரன் அங்கிருந்து புறப்பட முற்பட்ட போது அவருடைய காரினை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். அவர்கள் கூட்டணிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுகவினர் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு இந்த நெல்லிக்குப்பம் நகராட்சி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் கோஷம் எழுப்பினர்.

கூட்டணி தர்மம்
இந்நிலையில், கூட்டணி தர்மத்தை மீறி நடந்த இந்தச் சம்பவத்தைக் கண்டித்த தொல்.திருமாவளவன் முதல்வரின் ஆணையை மீறி கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்யவைத்து கூட்டணி அறத்தைக் காத்திட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

ஜெயப்பிரபா ராஜினாமா
இதனையடுத்து, கட்சி உத்தரவை மீறி செயல்பட்டவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டுமென திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி கட்சித் தலைமையை சந்தித்த நகராட்சித் துணை தலைவர் ஜெயபிரபா மணிவண்ணன் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் ட்வீட்
இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்.பி.யுமான தொல். திருமாவளவன் தனது ட்விட்டரில், நெல்லிக்குப்பம் நகர்மன்ற துணைத் தலைவராக தேர்வு பெற்ற ஜெயப்பிரியா அவர்கள் தமிழக முதல்வரின் ஆணையை ஏற்று பதவி விலகினார். அதனையொட்டி அவரும் தலைவராக தேர்வான ஜெயந்தியும் அமைச்சர் கணேசனை சந்தித்தனர் அப்பொழுது நானும் உடன் இருந்தேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்பியுமான திருமாவளவன் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
-
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
அதிமுகவில் இருந்து வந்தவர்களை சேர்த்தால்.. தவெக மீதான நம்பிக்கை போய்விடும்.. திருமாவளவன் வார்னிங்! -
தவெகவுக்கு தாவிய.. அதிமுக எம்எல்ஏக்களின் செயல் அர்த்தமற்றது! - கொந்தளித்த விசிகவின் பாலாஜி -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!












Click it and Unblock the Notifications