சென்னை மாநகராட்சி பதில் தந்தால் சிவகங்கைக்கு 1001 ரூபாய் மொய் எழுதுகிறேன்.. நெட்டிசன்கள் கிண்டல்
சென்னை: கூவம் ஆறு மறு சீரமைப்புத் திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்டு சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம், சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவிற்கு கடிதம் எழுதியிருந்தார். கடிதம் எழுதி 19 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இன்றுவரை பதில்வரவில்லை. இந்நிலையில் இப்போது பதிலை எதிர்பார்ப்பதாக அவர் கூறியிருந்தார். அதற்கு நெட்டிசன்கள் அளித்த பதில்கள் பற்றி இப்போது பார்ப்போம்.
கூவம் ஆறு மறு சீரமைப்புத் திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று சிவகங்கை தொகுதி எம்பியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தி இருந்தார். இது தொடர்பாக கடந்த செப்டம்பர் 1ம் தேதி சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியாவுக்கு, அவர் எழுதியிருந்த கடிதத்தில் கூறியிருந்ததாவது: கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை கூவம் ஆறு குறிப்பிடத்தக்க மாசுபாட்டுக்கு உள்ளாகியுள்ளது. கடந்தகால அறிக்கைகள் ஆபத்தான மோசமான நீரின் தரத்தை வெளிப்படுத்துகிறது. கூவம் நதியை சீரமைக்க மாநில அரசு ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், ஏற்கெனவே ரூ.329 கோடி செலவிடப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் மண்டலத் தலைவருக்கு நீங்கள்(மேயர் பிரியா) அளித்த பதிலில், அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து தொழில்நுட்ப உதவி மற்றும் நிதி வழங்குதல் உட்பட நடந்துகொண்டிருக்கும் பணிகளை குறிப்பிட்டுள்ளீர்கள். இருப்பினும், இந்த முயற்சிகள் குறித்து தெளிவு இல்லாமல் உள்ளது. எனவே, சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையானது, கூவம் ஆற்றின் மறுசீரமைப்புக்காக இன்றுவரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து திட்டங்கள் மற்றும் அவற்றை விவரிக்கும் ஒரு விரிவான வெள்ளை அறிக்கையை வெளியிடக் கோருகிறேன்.
அதில், சென்னை ஆறுகளின் மறுசீரமைப்பு திட்டங்களின் சுருக்கம், ஒவ்வொரு திட்டத்தின் விளக்கம், அதன் குறிக்கோள்கள், காலக்கெடு, செலவுகள், விளைவுகள் உட்பட ஒவ்வொரு திட்டத்தின் விரிவான கணக்கை நீங்கள் தெரிவிக்க வேண்டும். இத்திட்டத்தின் தற்போதைய சவால்கள், ஆற்றின் நிலை,திட்டமிடப்பட்ட மற்றும் உண்மையான விளைவுகளுக்கு இடையே உள்ள முரண்பாடுகள் பற்றி நீங்கள் தெரிவிக்க வேண்டும்.
தற்போது, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம் உட்பட சென்னையின் நீர்நிலைகளில் தினமும் விடப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரில் கிட்டத்தட்ட 30 சதவீதம் கூவம் ஆற்றில் கலந்து வருகிறது. சுத்திகரிக்கப்படாத கழிவுநீரில் சுமார் 60 சதவீதம் பக்கிங்ஹாம் கால்வாயில் பாய்கிறது, மீதி அடையாறு ஆற்றை நோக்கி செல்கிறது.
பக்கிங்ஹாம் கால்வாயை பொறுத்தவரை, கடற்கரைக்கு இணையாக செல்லும் ஒரு பெரிய கால்வாய், சென்னை நகரின் நீர்வாழ் சூழலை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், இந்த ஏரிகள், ஆறுகளில் திடக்கழிவுகள் மற்றும் கழிவுநீரை திறந்துவிடுவதன் மூலம் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றது. எனவே, அடையாறு சிற்றோடையின் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு (58 ஏக்கர்), அடையாறு சிற்றோடை மற்றும் முகத்துவாரத்தின் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு (300 ஏக்கர்), ஒருங்கிணைந்த கூவம் நதி சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு திட்டம் ஆகியவற்றின் தற்போதைய நிலையை தெரிவிக்க வேண்டும்" இவ்வாறு கார்த்தி சிதம்ரம் எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் கடிதம் எழுதி 19 நாட்கள் ஆன நிலையில் இன்றுவரை சென்னை மாநகராட்சி தரப்பிலோ அல்லது சென்னை மாநகராட்சி மேயர் தரப்பிலோ எந்த பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள கார்த்தி சிதம்பரம், பதிலுக்காக இப்போதும் காத்திருப்பதாக கூறியிருந்தார். இதற்கு நெட்டிசன்கள் பதில் அளித்து வருகிறார்கள். ஒரு நெட்டிசன் அளித்த பதிலில், சென்னை மாநகராட்சியிடம் பதில் கிடைத்தால் சிவகங்கை தொகுதி மேம்பாட்டுக்கு 1001 நன்கொடையாக தருகிறேன் என்று கூறியிருக்கிறார்.
இன்னொரு நெட்டிசன் வெளியிட்ட பதிலில், மாநகராட்சியிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? கூவம் & அடையாறு நதிகள் மறுசீரமைப்பு என்பது அப்பட்டமாக நடந்த ஊழல். இந்த 2 நதிகளையும் கொன்றுவிட்டு இப்போது கொசஸ்தலையாரு என்ற 3வது நதியும் கொல்லப்படுகிறது. தமிழகத்தில் கழிவு மேலாண்மை மற்றும் நதிகளை பாதுகாப்பதில் அக்கறை இல்லை என்று கூறியுள்ளார்.
மூன்றாவதாக ஒரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், கூட்டணியில் இருக்கீங்க... நீங்கள் நேரிலேயே போய் கேட்கலாம், இது உங்களுக்கு தேவை இல்லாத வேலை...பதில் வாங்கி என்ன பண்ண போறீங்க? என்று கேள்வி எழுப்பி உள்ளார். நான்காவதாக ஒரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், மேயர் மேடத்திற்கு நீங்கள் கடிதம் எழுதி கிட்டத்தட்ட ஒரு மாதமாகியும் அவரிடமிருந்து பதில் இல்லை.தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கே இதுதான் பதில் என்றால், சாமானியர்களுக்கு பதில் கிடைக்க எவ்வளவு நேரம் ஆகும் என்று யோசித்துப் பாருங்கள் என்று கூறியுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications