நீர் வள மேலாண்மையில் பூஜ்யம்! சாராய சாம்ராஜ்யம் மட்டுமே! கொந்தளிக்கும் மக்கள்!
Recommended Video
சென்னை: தமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் மக்கள் சமூக வலைதளங்களில் கொந்தளிக்க தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் நீலகிரி உள்ளிட்ட மிக சில மாவட்டங்களை தவிர பெரும்பாலான மாவட்டங்களில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் மட்டுமின்றி குளிப்பது, துவைப்பது என அனைத்திற்கும் குடத்துடன் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் தண்ணீர் பிரச்சனை உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி தொழில்நிறுவனங்களும் முடங்கியுள்ளன.

கொந்தளிக்கும் மக்கள்
மழை பெய்தால் மட்டுமே மக்களின் தேவை பூர்த்தியாகும் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் தண்ணீர் பிரச்சனை தொடர்பாக சமூக வலைதளங்களில் மக்கள் கொந்தளிக்க தொடங்கிவிட்டனர். இதனால் தவிக்கும் தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக் இன்றும் ட்ரென்ட்டாகியுள்ளது.
|
புலம்பி ஒன்றும் ஆகப்போவது இல்லை
காலம் காலமாக கண்டவனுக்கு ஓட்டு போட்டுட்டு தண்ணீர் இல்ல சாப்பாடு இல்லனு கத்தி புலம்பி ஒன்றும் ஆகபோவது இல்லை #தவிக்கும்தமிழ்நாடு
|
எப்படி ஆட்சி நடத்தப்போறீங்க?
சேலம் மக்களை அழிக்க 8 வழிச்சாலை
டெல்டா மக்களை அழிக்க ஹைட்ரோ கார்பன்
தேனியை அழிக்க நியூட்ரினோ
நெல்லையை அழிக்க கூடங்குளம்
கடலோர கிராமத்தை அழிக்க சாகர் மாலா
தூத்துக்குடியை அழிக்க ஸ்டெர்லைட்
எல்லாரைம் அழிச்சுட்டு எந்த மக்களை வைத்து ஆட்சி நடத்த போறீங்க எடப்பாடி?
|
இயற்கை மீது குற்றமில்லை
யார் பொறுப்பு?
நிச்சயமாக இயற்கை மீது எந்த குற்றமும் இல்லை
|
தாமதப்படுத்துவீர்களா?
இந்த நேரத்திலாவது அணைகளை, ஏரிகளை , நீர்த்தேக்கங்களை தூர்வாருவீர்களா...
இல்லை டெண்டர் விட்டு அதை செயல்படுத்துமுன் மழை வந்துவிடும் என தாமதப்படுத்துவீர்களா??
|
அதிரடி புள்ளி விவரம்
ஒரு லிட்டர் ஒயின் தயாரிக்க 960 லிட்டர் தண்ணீர் செலவு - அதிரடி புள்ளி விவரம்
|
டவுன்லோடு பண்ணமுடியாது
நீரையும், சோறையும் டவுன்லோடு பண்ண முடியாது ராஜா...
|
கண்டுகொள்ளாததே காரணம்
தட்டுப்பாடின்றி தனியார் நிறுவனங்களால் குடிநீர் வழங்க முடியும்போது, ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த அரசாங்கத்தால் ஏன் வழங்கமுடியவில்லை???
நிலத்தடி நீரை வரையறையின்றி உறிஞ்சும் நிறுவனங்களை கண்டுகொள்ளாததின் விளைவே
|
சாராய சாம்ராஜ்யம் மட்டுமே
நீர் ஆதாரத்தில் அலட்சியம்!!! நீர் தேக்கத்தில் , நீர் சேமிப்பில் திட்டமிடுதல் கிடையாது!!!! நீர் வள மேலாண்மையில் பூஜ்யம்!!!!! சாராய சாம்ராஜ்யம் மட்டுமே!!!!!
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications