Rafale Watch Memes: பேசாம பில் கொடுத்துடலாமா? “மறுபடியுமா?” அண்ணாமலையை ரவுண்டு கட்டிய நெட்டிசன்ஸ்!
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் 'ரஃபேல் வாட்ச்' ரசீதை திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கேட்க, அதற்கான பில்லை இதுவரை வெளியிடாமல், சொத்து, வருமான விவரங்களை வெளியிடுவேன் எனக் கூறி வருகிறார் அண்ணாமலை. இதையொட்டி, வாட்ச் வாங்கிய ரசீதை வெளியிடாமல் காலந்தாழ்த்தி வரும் அண்ணாமலையை கிண்டல் செய்து சமூக வலைதளங்களில் மீம்ஸ் பறக்கின்றன. அவற்றில் சில இங்கே..
அண்ணாமலை கையில் அணிந்திருந்த வாட்ச்சின் விலை 5 லட்சம் ரூபாய் என தெரிய வந்ததையடுத்து பலரும் அண்ணாமலைக்கு இவ்வளவு மதிப்புள்ள வாட்ச் வாங்க பணம் எங்கிருந்து வந்தது என பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அப்போது அதற்கு பதில் அளித்துப் பேசிய அண்ணாமலை, நான் தேசியவாதி. அதனால் ரஃபேல் விமான பாகத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட வாட்ச்சை கட்டியிருக்கிறேன், 2021ல் பாஜக தலைவரான பிறகு தான் வாட்ச் வாங்கினேன் என்றார்.
அதனை விமர்சித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, பிரான்ஸ் நிறுவனத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு, 5 லட்சம் ரூபாய்க்கும் மேல் விலையுள்ள ரஃபேல் வாட்ச்சை வெறும் 4 ஆட்டுக்குட்டிகள் மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார். வாட்ச் வாங்கிய ரசீதை வெளியிட முடியுமா? என சவால் விட்டார்.

பில் இருக்கிறது.. வெளியிடுவேன்
ஆனால், தான் தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை தொடங்கும்போது, வாட்ச் பில், சொத்து, வருமான விவரங்கள் அனைத்தையும் வெளியிடுகிறேன் எனக் கூறினார் அண்ணாமலை. அதற்கு திமுகவினர், சொத்து விவரமெல்லாம் தேர்தல் ஆணையத்திடமே இருக்கும், வாட்ச் பில்லை மட்டும் வெளியிடுங்கள் எனக் கேட்டு வருகின்றனர். அதற்கும் அண்ணாமலை, முதல்வர் மற்றும் அமைச்சர்களின் சொத்து விவரங்களை திரட்டி வருகிறேன், வெளியிடுவேன் எனக் கூறி வருகிறார். தொடர்ந்து கேட்டும், இதுவரை அண்ணாமலை, வாட்ச் வாங்கிய ரசீதை காட்டவில்லை. இதையடுத்து, நெட்டிசன்கள் அண்ணாமலை மீம்ஸ் போட்டு சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்..

அதான் தேர்தல்லயே பார்த்துட்டோமே
அண்ணாமலை : விரைவில் சொத்துப் பட்டியலை வெளியிடுகிறேன்
மக்கள் : சொத்து மதிப்பு தான் தோத்துப்போன அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் அப்பவே கொடுத்துட்டீங்களே.. இப்ப ரஃபேல் வாட்ச் வாங்கின ரசீதை கொடுங்க..

ரஃபேல் சீக்ரெட் இருக்குமோ?
இந்திய ராணுவ அலுவலகத்தில் இருந்து காணாமல் போன ரஃபேல் ஆவணங்களின் ரகசிய குறியீடுகள் ஏதாவது, அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச்சில் இருக்குமோ??

உலகத்துலேயே
இந்தியாவுலேயே ஏன் உலகத்துலேயே 4 ஆடு மேய்ச்சு, 5 லட்ச ரூபாய்க்கு வாட்ச் வாங்குன ஒரே சாதாரண விவசாயி நம்ம அண்ணாமலை தான்..

விஷயம் தெரியுமா?
உனக்கு விஷயம் தெரியுமா? ரஃபேல் வாட்ச் கட்டி இருக்கவங்க தான் தேசியவாதியாம்.. மத்த வாட்ச் கட்டி இருக்கவங்க எல்லாம் தீவிரவாதியாம்.. எங்க அண்ணாமலை அண்ணன் கண்டுபிடிச்சு சொல்லி இருக்காரு.

அப்போ நாங்க யாரு?
ரஃபேல் எடிஷன் வாட்ச் கட்டுனவங்க தான் தேசியவாதின்னா, அப்போ, HMT, TITAN வாட்ச் கட்டுற நாங்க எல்லாம் தீவிரவாதியா?

அங்க வாங்க.. ஏரியாவுக்கு வாங்க
ரஃபேல் வாட்ச் கட்டுனதெல்லாம் சரி.. அந்த பில்லை காட்டிட்டு போங்க அண்ணாமலை..
அண்ணாமலை : பாதயாத்திரை போகும்போது சொத்து, வருமான விவரத்தையும் சேர்த்து வெளியிடுறேன்..
அந்த வாட்ச் பில் மட்டும் இப்போ காட்டுங்க போதும்..
அண்ணாமலை : முதல்வர், அமைச்சர்கள் சொத்து விவரத்தை எல்லாம் வெளியிடுறேன் வாங்க..

5 லட்சம் ரூபாய் வாட்ச் வந்தது எப்படி?
நான் ஒரு தேசியவாதி.. ரஃபேல் வாட்ச் கட்டக்கூடாதா?!
தாராளமா கட்டலாம்.. ஆனா 4 ஆடு தான் வச்சிருக்கேன்.. சாதாரண விவசாயினுக்கு சொல்லிட்டு 5 லட்சத்துக்கு வாட்ச் வச்சிருக்கீங்களே.. எப்படி?

ஆமா.. இல்ல
அண்ணாமலை : திமுகவினர் சொத்து பட்டியலை வெளியிடுவேன்.
திமுக : என்ன பிரச்சனை இப்ப? ரஃபேல் வாட்ச்சுக்கு பில் இல்லையா?
அண்ணாமலை : எது? ஆமா, இப்ப என்னா அதுக்கு?

வாட்ச் இங்க.. பில் எங்க?
ரஃபேல் வாட்ச் இங்க இருக்கு?
இதுக்கான பில் எங்க இருக்கு?
அட.. அதாண்ணே இது!

மறுபடியும் மொதல்ல இருந்தா?
ஒரிஜினல் பில்ல குடுத்துடலாமா?
ஒரிஜினல் ஓனர் பேரு தெரிஞ்சிடுமே
அப்போ ஐபிஎஸ் வேலை பாத்தப்ப வாங்குன மாதிரி பில் ரெடி பண்ணிடலாமா?
அதை ஏன் 2021-தேர்தல் பத்திரத்துல காட்டலைனு கேட்பாங்களே
சரி 2021 தேர்தலுக்குப் பின்னாடி வாங்குன மாதிரி பில் ரெடி பண்ணிடலாமா?
3.5 லட்சத்துக்கு வருமான ஆதாரம் கேட்பாங்களே?
அப்போ ஒரிஜினல் பில்ல குடுத்துடலாமா?
ஒரிஜினல் ஓனர் பேரு தெரிஞ்சிடுமே..

என் பேரு அண்ணாமலை இல்ல
என்னோட வாட்ச் பில்லை கேட்டு என்னை அவமானப்படுத்திட்டீங்க இல்ல..? 2 லட்சம் கோடிக்கு உங்க மேல ஊழல் பட்டியல் ரெடி பண்ணி எக்ஸெல் சீட்ல வெளியிட்டு உங்களை பழிவாங்கல என் பேர் அண்ணாமலை இல்ல.

ரசீதை காட்டுங்க
அண்ணே.. ரொம்ப நேரமா வாட்ச்சையே பார்த்துக்கிட்டு இருக்காதீங்க.. சீக்கிரம் பில் எடுத்து காட்டுங்க!

கதை விடாதீங்க
8 லட்ச ரூபா ஃபாரீன் வாட்ச் வேணும்னா இஷ்டம் போல வாங்கிக் கட்டிக்கோங்க.. அதுக்காக தேசபக்தி அது இதுன்னு கதை விடாதீங்க..
ரஃபேல் எடிஷனை நாம வாங்கிக் கட்டுனா அது ஃப்ரெஞ்சுக்காரனுக்கு தானே பெருமை?












Click it and Unblock the Notifications