அட.. பெண்ணின் திருமண வயதை உயர்த்த அரசு முடிவு செய்ததும்.. நம்ம மக்கள் பண்ற வேலையை பாருங்க!
நாடு முழுவதும் பொருளாதாரத்தில் நலிவடைந்திருக்கும் குடும்பங்கள் மிக விரைவாக தங்களது பெண்களுக்கு திருமணம் நடத்த தீவிரம் காட்டி வருகின்றன.
சென்னை: பெண்களின் சட்டபூா்வ திருமண வயதை 18 இல் இருந்து 21-ஆக உயா்த்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்திருக்கும் நிலையில், மக்கள் வேறு ஒரு பிளானில் காய் நகர்த்த ஆரம்பித்து விட்டனராம்.
இந்தியாவில் தற்போது ஆண்களின் திருமண வயது 21ஆகவும் பெண்களின் திருமண வயது 18ஆகவும் உள்ளது. பெண்களின் சட்டப்பூர்வ திருமண வயதை உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
பெண்களின் திருமண வயதை உயா்த்துவதற்கு அரசு பரிசீலித்து வருவதாக பிரதமா் நரேந்திர மோடி அறிவித்திருந்தாா். இதுதொடா்பாக ஆய்வு செய்வதற்கு சமதா கட்சியின் முன்னாள் தலைவா் ஜெயா ஜேட்லி தலைமையில் 4 போ குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு, ஆண்களின் திருமண வயதுக்கு நிகராக பெண்களின் திருமண வயதை 21ஆக உயா்த்துவதற்குப் பரிந்துரை செய்துள்ளது.

திருமண வயது 21
இந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொண்டுள்ள மத்திய அமைச்சரவை, பெண்களின் திருமண வயதை 21-ஆக உயா்த்துவதற்கு கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. இதுதொடா்பாக, சிறாா் திருமணச் சட்டம்-2006 இல் திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே மத்திய அரசு தாக்கல் செய்யும் எனத் தெரிகிறது. ஒரே திருமண வயதை உறுதிசெய்வதற்கு வெவ்வேறு சமூகத்தினரின் திருமணம் தொடா்பான தனிச் சட்டங்களிலும் திருத்தம் மேற்கொள்வதற்கு இந்த மசோதா வழிவகுக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜெயா ஜேட்லி
ஒவ்வொரு துறையிலும் பாலின சமத்துவம், பாலின பேதமின்றி அதிகாரம் அளிக்க வேண்டும் என்று பேசி வருகிறோம். ஆனால், திருமண வயதைப் பொருத்தவரை ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறாக உள்ளது என்று செய்தியாளர்களிடம் பேசிய ஆய்வுக் குழுவின் தலைவா் ஜெயா ஜேட்லி தெரிவித்தார்.

பெண்களின் மனக்குறை
பெண்களுக்கு 18 வயதில் திருமணம் செய்து வைக்கலாம் என்பதால் பள்ளிப் படிப்புடன் அவா்களின் கல்வி முடிந்துவிடுகிறது. அவா்கள் கல்லூரி சென்று படிப்பதற்கான வாய்ப்பு பறிக்கப்படுகிறது. ஆனால், ஆண் 21 வயது வரை தனக்கான வேலை, தொழில் ஆகியவற்றைப் பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கின்றன. பெண்களால் வருமானம் ஈட்ட இயலவில்லை என்பதால் அவா்களை பெற்றோா் திருமணம் செய்து கொடுத்துவிடுகிறாா்கள். அந்தப் பெண்கள் மனக்குறையுடன் வாழ்கிறாா்கள்.

உயரும் திருமண வயது
அதைப் போக்கும் வகையில் ஆண்களுக்கு நிகராக பெண்களின் திருமண வயதை உயா்த்த வேண்டும் என்று பரிந்துரை செய்கிறோம். கல்லூரி, பல்கலைக்கழகங்களின் பயிலும் இளைஞா்கள், கிராமப்புறங்களில் பள்ளிப் படிப்பை முடித்தவா்கள் என பல்வேறு தரப்பினரிடம் கருத்து கேட்டோம். அவா்கள் அனைவரும் பெண்களின் திருமண வயதை 22 அல்லது 23-ஆக உயா்த்தலாம் என்று பதில் அளித்தனா். எங்கள் பரிந்துரை அறிக்கையை கடந்த டிசம்பரில் பிரதமா் அலுவலகம், மகளிா், சிறாா் நல அமைச்சகம், நீதி ஆயோக் ஆகியவற்றுக்கு அனுப்பி வைத்தோம் என்றாா் அவா்.

அதிகரிக்கும் திருமணங்கள்
இதனிடையே பெண்களின் சட்டபூா்வ திருமண வயதை 18 இல் இருந்து 21ஆக உயா்த்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்திருக்கும் நிலையில், பொருளாதாரத்தில் நலிவடைந்திருக்கும் குடும்பங்கள் மிக விரைவாக தங்களது பெண்களுக்கு திருமணம் நடத்த தீவிரம் காட்டி வருகின்றன.

பெற்றோர் அவசரம்
ஹரியாணா உள்ளிட்ட சில மாநிலங்களில், 18 வயது முதல் 21 வயதுக்குள்பட்ட பெண்களுக்கு மிக விரைவாக திருமணம் செய்ய அவர்களது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். ஹரியாணா மாநிலம் மேவாத் பகுதியில், டிசம்பர் 17, 18ஆம் தேதிகளில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், 17, 18 வயதுடையவர்களாக இருந்த சுமார் 35க்கும் மேற்பட்ட பெண்கள், தங்களது பெற்றோர், உடனடியாக தங்களுக்கு திருமணம் முடிக்க திட்டமிட்டிருப்பதாக புகார் அளித்துள்ளனர்.

திருமண ஏற்பாடுகள்
மேற்கு உத்தரப்பிரதேசத்தின் சில மாவட்டங்களிலும் இதுபோன்று நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல பகுதிகளில் வழக்கமான அளவை விட, அதிகமான திருமண ஏற்பாடுகள் நடப்பதாகவும், இமாம்களுக்கும் அதிக அழைப்புகள் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலான பெண்கள் 18 முதல் 21 வயதுக்குள்பட்டவர்களாகவே இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெண்கள் குற்றச்சாட்டு
அதுமட்டுமல்ல, நீதிமன்றங்களில் நடக்கும் திருமணங்களும் அதிகரித்திருப்பதாகவும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும், 500 திருமணங்கள் நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தங்களது தோழிகள் பலருக்கும் திடீரென திருமணம் முடிவாகிவிட்டதாகவும், இதனால் தங்களது பெற்றோரும் உடனடியாக திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார்கள் என்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தினசரி திருமணங்கள்
குருகிராமில், நீதிமன்றங்களில் நடக்கும் கலப்புத் திருமணங்கள் அதிகரித்திருப்பதாகவும், ஒரு நாளைக்கு சராசரியாக 5 திருமணம் நடைபெறும் நிலையில், அது தற்போது 20 ஆக அதிகரித்திருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications