புதிய தலைமைச் செயலகத்திற்கு இடம் பார்த்தாச்சு! வங்கக் கடல் அருகே 25 ஏக்கரில் 15 மாடி கட்டடம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபையில் விஜய் அறிவித்திருந்த தமிழக அரசின் புதிய தலைமைச் செயலக கட்டடம், சென்னை பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கிறது. இதற்கான அனுமதியை வீட்டு வசதி வாரியமும், சென்னை மாநகராட்சியும் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டசபை கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடியது. அப்போது முதல்வர் விஜய் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதில் தற்போதுள்ள தலைமைச் செயலகம் இரு கட்டடங்களில் நடைபெறுகிறது.

joseph vijay tamil nadu

ஒன்று புனித ஜார்ஜ் கோட்டை, மற்றொன்று நாமக்கல் கவிஞர் மாளிகை. இந்த மாளிகையில் 30-க்கும் மேற்பட்ட துறைகள் இயங்கி வருகின்றன. மாநில அரசின் விரிவடைந்து வரும் நிர்வாக தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் நமது கவிஞர் மாளிகை 1978 ஆம் ஆண்டு 3.75 லட்சம் சதுர அடி பரப்பளவில் தரை தளம், 10 தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இங்கு 6000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இடப்பற்றாக்குறையின் காரணமாக நிர்வாக நலனை கருதி ஓமந்தூரரார் அரசின் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. ஆனால் இது பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டது.

மேலும் தற்போதுள்ள இரு கட்டடங்களிலும் நாளுக்கு நாள் அதிகாரிகள், ஊழியர்கள், துறைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் உலகத்தரத்தில் ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் அமைப்பது அவசியம்.

ரூ 1200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுரடி பரப்பில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும். நவீன வசதிகளுடன் கூடிய அலுவலகம் அமைக்கப்படும். புனித ஜார்ஜ் கோட்டை, தொல்லியல் துறை, பாதுகாப்பு துறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ளன.

புனித ஜார்ஜ் கோட்டை வரலாற்றுச் சின்னமாகும் என விஜய் அறிவித்தார். இங்கு தீயணைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகள் சென்று வர வசதிகள், பசுமைக் கட்டட தர நிலைகளுக்குள்பட்டு நவீன நிர்வாக வளாகம் உருவாக்கப்படும்.

போதுமான வாகன நிறுத்துமிடங்கள், மாநாட்டு அரங்குகள், பொதுமக்கள் சேவை மையங்கள், அலுவலர்களுக்கான நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும். அனைத்து அரசுத் துறைகளும் ஒரே கட்டடத்தில் இயங்கும்.

புனித ஜார்ஜ் கோட்டை குறித்து விஜய் கூறியிருப்பதாவது: புனித ஜார்ஜ் கோட்டையானது 1640ஆம் ஆண்டு சென்னை வணிக செயல்பாட்டு மையத்திற்கான வாங்கப்பட்ட நிலத்தில் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. 1644 ஆம் ஆண்டு இந்த கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. 1652 ஆம் ஆண்டு பிரசிடென்சி நிலைக்கு உயர்த்தப்பட்ட பிறகு, பிரிட்டிஷ் ஆட்சியின் அதிகாரப்பூர்வ தலைமை இடமாகத் திகழ்ந்தது.

கிட்டத்தட்ட 400 ஆண்டுகாக தமிழக அரசின் நிர்வாக மையகமாகவும் மாநிலத்தின் ஆட்சி பாரம்பரியத்தின் அடையாளமாகவும் விளங்கி வருகிறது. சுமார் 107 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த வளாகத்தில் தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தலைமைச் செயலகத்தின் பயன்பாட்டிற்காக சுமார் 4 ஏக்கர் நிலப்பரப்பு மட்டுமே உள்ளது.

எனவே இடநெருக்கடியை கருத்தில் கொண்டு புதிய தலைமைச் செயலகத்தை அமைப்பது குறித்து விஜய் அறிவித்திருந்தார்.

இதையடுத்து புதிய தலைமைச் செயலகம் எங்கு அமைய போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் தற்போது அதற்கான இடம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதாவது பட்டினம்பாக்கம் ஃபோர்ஷோர் எஸ்டேட்டில் சுமார் 25 ஏக்கரில் புதிய தலைமைச் செயலகத்தை கட்டுவதற்கு தமிழக வீட்டு வசதி வாரியமும், சென்னை மாநகராட்சியும் அனுமதி வழங்கியுள்ளதாக அரசு வட்டாரங்களில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருவாய்த் துறைக்கு சொந்தமான கூடுதல் நிலங்களுடன் சேர்த்து மொத்தம் 26 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட இருப்பதாக கூறுகின்றனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என சொல்லப்படுகிறது.

15 அடுக்குகளைக் கொண்டதாக அமைக்கப்படவுள்ளது. பட்டினம்பாக்கம், கிண்டியில் உள்ள தேசிய ஆராய்ச்சி நிலையம், நந்தம்பாக்கத்தில் உள்ள பின்டெக் சிட்டி அருகே உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டன. இதில் 25 ஏக்கர் நிலமான பட்டினம்பாக்கம் தேர்வு செய்யப்படவுள்ளது என்கிறார்கள்.

இந்த இடம் 1958 ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு சுமார் 1963 - 1998 ஆம் ஆண்டு வரையில் சுமார் 1380 அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டிருந்தன. தற்போது இவை சிதிலமடைந்துள்ளதால் அதனை இடிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+