ஃபுல் ஸ்பீடில் தமிழக அரசு.. 'பெட்' இருப்பு அறிய.. 'நியூ' ட்விட்டர் அக்கவுண்ட்
சென்னை: மருத்துவமனைகளில் படுக்கைகள் வசதி குறித்த தகவல்களை தமிழக அரசு @104_GoTN என்ற ட்விட்டர் கணக்கை தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை ஈவு இறக்கிமின்றி வீசிக் கொண்டிருக்கிறது. பல்வேறு மாநிலங்களில் நோயாளிகளை அனுமதிக்க இடமில்லை, மூச்சுத்திணறலால் அவதிப்படுவோருக்கு ஆக்சிஜன் சிலிண்டர் இல்லை, உயிரை பாதுகாக்க 'ரெமிடிசிவிர்' மருந்தும் இல்லை.
இப்படி நாடே அல்லாடிக் கொண்டிருக்க, வெளிநாடுகளில் இருந்து இப்போதுதான் உதவிகள் கிடைக்கத் துவங்கியுள்ளன. ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உபகரணங்களுடன் அமெரிக்கா அனுப்பிய விமானம் இன்று இந்தியாவை வந்தடைந்தது. அடுத்த இரு நாட்களில், மேலும் பல்வேறு நாடுகளில் இருந்து உதவிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தடுமாறும் தலைநகர்
பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் படுக்கை வசதிகளுக்கு 'ரெகமெண்டேஷன்' வரை சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், தமிழகம் அவ்வளவு மோசமானதாக இல்லையென்றாலும், இங்கும் திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னையில்.

படுக்கைகள் விவரம்
இந்த நிலையில், மருத்துவமனைகளில் படுக்கைகள் வசதி குறித்த தகவல்களை மக்கள் எளிதில் தெரிந்து கொள்ளும் பொருட்டு, தமிழக அரசு பிரத்யேகமாக ட்விட்டர் பக்கம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. நோயாளிக்கான படுக்கை வசதி குறித்த கூடுதல் தகவலை @104_GoTN என்ற ட்விட்டர் கணக்கு மூலம் பெறலாம்.

விரைவில் அறிய
இந்த வசதியை பிரபலப்படுத்த #BedsForTN என்ற ஹேஷ்டேக் பயன்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ட்விட்டர் கணக்கின் மூலம், தமிழகத்தில் எந்தெந்த நகரில் எந்தெந்த மருத்துவமனையில் படுக்கை வசதி காலியாக உள்ளது என்ற தகவலை மக்கள் விரைவில் தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் விவரம்
அதுமட்டுமின்றி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பில் இயங்கும் https://stopcorona.tn.gov.in/beds.php எனும் தளத்தின் மூலமும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளின் படுக்கை விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.












Click it and Unblock the Notifications