சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

'மலர்ந்தது 2022'.. மக்கள் உற்சாக கொண்டாட்டம்.. கோவில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!

Google Oneindia Tamil News

சென்னை: நமக்கு பல வகையில் துன்பங்கள், இன்பங்கள் என்று கொட்டி கொடுத்த 2021-ம் ஆண்டு விடை பெற்று விட்டது. 'புத்தாண்டு 2022' பிறந்து விட்டது. 'புத்தாண்டு 2022' மலர்ந்து விட்டதால் நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.

Recommended Video

    Happy New Year 2022 | கோவில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு | Oneindia Tamil

    டெல்லி, கோவா போன்ற மாநிலங்களிலும் மும்பை, பெங்களுரு, ஹைதராபாத் போன்ற நகரங்களிலும் மக்கள் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

    தமிழகத்தில் ஜனவரி 10 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. புதிய கட்டுபாடுகள் அறிவிப்பு.. முழு விவரம் இதோ!தமிழகத்தில் ஜனவரி 10 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. புதிய கட்டுபாடுகள் அறிவிப்பு.. முழு விவரம் இதோ!

    களைகட்டிய கொண்டாட்டம்

    களைகட்டிய கொண்டாட்டம்

    தமிழகத்திலும் தலைநகர் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் மக்கள் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். சென்னையில் கொரோனா காரணமாக மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரையில் மக்கள் கூடுவதற்கு தடை செய்யப்பட்டதால் வழக்கமான கொண்டாட்டம் இல்லை. பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.

     சென்னையில் கட்டுப்பாடுகள்

    சென்னையில் கட்டுப்பாடுகள்

    சென்னை முழுவதும் ஆயிரக்கணகனக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. ஆனால் மக்கள் தங்கள் குடியிருப்புகளிலேயே புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதேபோல் சென்னையின் சாந்தோம், பெசன்ட் நகர் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    தேவாலயங்கள், கோவில்களில் சிறப்பு வழிபாடு

    தேவாலயங்கள், கோவில்களில் சிறப்பு வழிபாடு

    மேலும், மயிலாப்பூர், வடபழனி உள்ளிட்ட சென்னையின் பிரசித்தி பெற்ற கோவில்களிலும் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் சாமியை தரிசித்தனர். இதேபோல் கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, தமிழகம் முழுவதும் முக்கிய கோவில்கள், தேவாலயங்ககளில் சிறப்பு வழிபாடு நடந்தது. நாகை மாவட்டம் வேளாங்கன்னியில் பிரசித்தி பெற்ற ஆரோக்கிய மாதா கோவிலில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான பகதர்கள் கலந்து கொண்டனர்.

    புதுவையில் ஆட்டம், பாட்டம்

    புதுவையில் ஆட்டம், பாட்டம்

    தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள குடியிருப்புகளில் ஆட்டம், பாட்டத்துடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். தங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் பரிமாறி வருகின்றனர். புதுவை மாநில கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் கூடி புத்தாண்டை கொண்டாடினர். அங்கு கொட்டும் மழையிலும் இளைஞர்கள், இளம்பெண்கள் உற்சாக ஆட்டம் போட்டனர். இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.

    English summary
    New Year 2022 has blossomed and New Year celebrations across the country have been weeded out. People in Tamil Nadu and other cities including Chennai, Coimbatore and Madurai are celebrating the New Year
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X