நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான்
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அனலடித்து கொண்டிருக்கிறது. திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி அதிரடியாக வெளியேறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.. முக்கியமாக, அக்கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி வேல்முருகனின் சகோதரர் தி. திருமால்வளவன், கடலூர் மாவட்டத்தின் முக்கிய தொகுதியான நெய்வேலியில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்திருப்பது ஒட்டுமொத்த கவனத்தையும் அந்தத் தொகுதியின் பக்கம் திருப்பியுள்ளது.
வேல்முருகன் சகோதரர் திருமால்வளவன் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், "திமுக கூட்டணியில் நமது கட்சியின் வளர்ச்சிக்கும், தொண்டர்களின் உழைப்பிற்கும் உரிய அங்கீகாரம் அங்கு கிடைக்கவில்லை என்பது வருத்தமான உண்மை.

கடலூர் தவாக வேல்முருகன்
ஒரு தொகுதியை மட்டும் ஒதுக்க முன்வந்ததை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே, சுயமரியாதையைக் காக்க வேண்டும் என்ற நோக்கில் திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாகத் தலைவர் அறிவித்திருக்கிறார்..
இந்தச் சூழலில், நெய்வேலி மண்ணின் மைந்தனாக, உங்கள் வீட்டுப் பிள்ளையாக, வரும் சட்டமன்றத் தேர்தலில் நெய்வேலி தொகுதியில் நான் போட்டியிட முடிவு செய்துள்ளேன்.
இந்தப் பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காகவும், என் மண் சார்ந்த உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். இப்போது உங்கள் ஆதரவோடு நேரடியாகத் தேர்தல் களத்தில் நிற்கிறேன். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொண்டர்களும், பொதுமக்களும் எனக்குப் பேராதரவு தந்து, வெற்றியைத் தேடித்தர வேண்டும் என்றெல்லாம் உருக்கமாக கேட்டுக் கொண்டுள்ளார்.
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன்
நெய்வேலி மண்ணின் மைந்தனாகக் களமிறங்குவதாக அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..
நெய்வேலி தொகுதியை திருமால்வளவன் தேர்ந்தெடுத்ததற்கு பின்னால் மிக வலுவான காரணங்கள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.. பல வருடங்களாகவே இந்த தொகுதியில் மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் அவர், அந்த பகுதி மக்களின் அன்றாடப் பிரச்சனைகளுடன் நேரடித் தொடர்பில் இருப்பவர்..
குறிப்பாக, நெய்வேலி நிலக்கரி சுரங்க பணிகள் தொடர்பான நிலம் கையகப்படுத்துதல் மற்றும் உள்ளூர் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு விவகாரங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து முன்னின்று போராடி வருகிறது.. இந்த தொகுதியில் வன்னியர் சமூக வாக்குகளுடன், தொழிலாளர் வர்க்கத்தின் வாக்குகளும் கணிசமாக இருப்பதால், வேல்முருகனின் செல்வாக்கு இங்கே ஒரு பெரும் பலமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக பாமக கோட்டை
அதேசமயம், நெய்வேலி தொகுதியில் திமுக, அதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகளும் நீண்டகாலமாகத் தங்கள் பிடியை வைத்துள்ளதையும் மறுக்க முடியாது.
திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் பகுதிகளில் ஒன்றாக இது இருந்தாலும், உட்கட்சிப் பூசல்களும் நிலம் சார்ந்த பிரச்சனைகளும் ஆளுங்கட்சிக்கு சவாலாக அமையலாம் என்கிறார்கள் விமர்சகர்கள்.
அதேபோல அதிமுகவை பொறுத்தவரை, தங்கள் வாக்கு வங்கியைத் தக்கவைக்கக் கடுமையான முயற்சியை மேற்கொள்ளும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.. பாமகவின் செல்வாக்கு மிகுந்த இப்பகுதியில், அதே சமூக பின்னணியைக் கொண்ட திருமால்வளவன் களமிறங்குவது பாமகவின் வாக்குகளை பிரிப்பதற்கான வாய்ப்புகளை நிச்சயம் உருவாக்கலாம்.. இது பாமக மற்றும் அதிமுக கூட்டணிகளுக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுக்கக்கூடும்.
விஜய் என்ன செய்வார்?
இதற்கெல்லாம் மேலாக, விஜய்யின் தவெக இருப்பதையும் லேசாக எடுத்து கொள்ள முடியாது.. தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை இந்த தேர்தலில் ஒரு X காரணியாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் வாக்குகளைத் தவெக எந்தப் பக்கம் திருப்புகிறதோ, அதுவே நெய்வேலி தொகுதியின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறும் என்பது தற்சமயம் உள்ள கள நிலவரம்.
காரணம், இளைஞர்களின் ஆதரவை பெற்றுள்ள தவெக, பாரம்பரிய கட்சிகளின் வாக்கு வங்கியில் ஓட்டையை போட்டால், அது திருமால்வளவன் போன்ற தனித்த போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமையக்கூடும். எப்படிப்பார்த்தாலும் நெய்வேலியில் இப்போது உருவாகியுள்ள மும்முனை அல்லது 4 முனைப்போட்டி தமிழக அரசியலில் ஒரு முக்கிய மாற்றத்திற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது..
ஆக மொத்தம் வேல்முருகனின் சகோதரரே நேரடியாகக் களமிறங்குவதால், இந்தத் தேர்தல் களம் ஒரு சாதாரண போட்டியாக இல்லாமல், கவுரவப் போராட்டமாக மாறியுள்ளது என்பதை மட்டும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ












Click it and Unblock the Notifications