சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழ்நாட்டின் 9 இடங்களில் பரபரப்பாக நடந்த என்.ஐ.ஏ. சோதனை - ஏராளமான ஆவணங்கள் பறிமுதல்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் 9 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மேற்கொண்ட தீவிர சோதனையில் டிஜிட்டல் ஆவணங்கள், கையெழுத்து குறிப்புகள் சிக்கி இருக்கின்றன.

ஐ.எஸ். அமைப்பினருக்கு நிதி திரட்டி கொடுத்த வழக்கு ஒன்றை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கிய அதிகாரிகள் ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடையதாக கூறி சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேரை கைது செய்தனர்.

NIA recovers Digital and scriptual documents at the raid in Tamilnadu

அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னை, மயிலாடுதுறை, காரைக்கால் உட்பட தமிழ்நாடு முழுவதும் 9 இடங்களில் இன்று அதிகாலை முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக சென்னை மண்ணடி, அண்ணா சாலையில் உள்ள கட்டிடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதல் தீவிர சோதனை நடத்தி வந்தனர்.

இந்த சோதனையில், 16 டிஜிட்டல் கருவிகள், 6 போலி ஆவணங்கள், கம்பிகள், குறிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த ஆவணங்களை அடிப்படையாக கொண்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்யப்பட்ட 5 பேரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

English summary
NIA recovers Digital and scriptial documents at the raid in Tamilnadu: தமிழ்நாட்டில் 9 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மேற்கொண்ட தீவிர சோதனையில் டிஜிட்டல் ஆவணங்கள், கையெழுத்து குறிப்புகள் சிக்கி இருக்கின்றன.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X