நீலகிரி, கோவையில் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழை வெளுக்கும் - வானிலை அறிவிப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தென்மேற்குப்பருவமழை பல ஊர்களில் விட்டு விட்டு பெய்து வரும் நிலையில் இன்று தொடங்கி 5ஆம் தேதி வரைக்கும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு,கரூர் தோகைமலை, ஏத்தாப்பூர், 4, நாகப்பட்டினம், நாமக்கல் , காரியாபட்டி, தாத்தையங்கார்பேட்டை, மதுரை விமான நிலையம், பென்னாகரம் , கொடுமுடி, பொன்னேரியில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது. செய்யார், திருப்பூர், சோளிங்கர் , கும்பகோணம், திருவாரூர், திருப்பத்தூர், மதுராந்தகம் , திருமயத்தில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது, அவலாஞ்சி, கோவிலான்குளம்,வேலூர், பாடலூரில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

இன்ற முதல் இன்னும் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடி மின்னலுடன் மழை

இடி மின்னலுடன் மழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.

நீலகிரி, தேனி, திண்டுக்கல்

நீலகிரி, தேனி, திண்டுக்கல்

நாளைய தினம் நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.

மிதமான மழை

மிதமான மழை

செப்டம்பர் 3ஆம் தேதி நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.

கனமழைக்கு வாய்ப்பு

கனமழைக்கு வாய்ப்பு

4 ஆம் தேதி நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஈரோடு, நாமக்கல், தேனி, திண்டுக்கல், வேலூர, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.

 செப்டம்பர் 5 வரை மழை வெள்ளம்

செப்டம்பர் 5 வரை மழை வெள்ளம்

5ஆம் தேதி நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.

 சென்னையில் மேக மூட்டம்

சென்னையில் மேக மூட்டம்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று வீசும்

பலத்த காற்று வீசும்

இன்றும் நாளையும் வட தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கேரள கடலோர பகுதிகள், மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இன்று முதல் 5ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

டெல்லியில் கனமழை

டெல்லியில் கனமழை

தலைநகர் டெல்லியில் இரவு முதல் விடிய விடிய பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை தேங்கியுள்ளது. சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். டெல்லியில் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. முக்கிய சாலைகளில் வாகனங்கள் பல மீட்டர் தொலைவுக்கு அணி வகுத்து நின்றன. இன்றும் மழை நீடிக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 அசாமில் பெருவெள்ளம்

அசாமில் பெருவெள்ளம்

அசாமில் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் 11 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1.33 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பிரம்மபுத்திரா நதியில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருகியுள்ளது. காசிரங்கா வன உயிரியல் பூங்கா வெள்ளத்தில் மிதக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+