அய்யயோ.. நடிகை வினோதினியா இது.. "வெங்காய தோசை.." நிர்மலா சீதாராமனை வறுத்து தள்ளி வெளியிட்ட வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜிஎஸ்டி உயர்வு பற்றி ரீல்ஸ் போட்டு கிண்டலடித்த நடிகை வினோதினி.. இப்போது அமெரிக்க டாலர் இந்திய ரூபாய் மதிப்பு பற்றி சமீபத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதை வைத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் பதிவிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தயிர் மோர் மற்றும் லெஸ்சி போன்ற பால் சம்பந்தப்பட்ட பொருட்களுக்கு ஐந்து சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்து இருந்தது மத்திய அரசு. இதனையடுத்து ஆவின் பால் லிமிடெட் பால் சம்பந்தமான பொருட்கள் பால், தயிர், மோர், லெஸ்சி போன்ற பால், விலையை உயர்த்தியது. ஆவின் இனிப்புகளும் விலை உயர்த்தப்பட்டது. இதற்கு காரணம் மத்திய அரசின் பால் பொருட்களுக்கு போடப்பட்ட ஐந்து சதவீத ஜிஎஸ்டி வரி காரணம் என்று கூறப்பட்டது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருகிறது. இந்த நிலையில், 'இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதாக நான் பார்க்க வில்லை என்றும்.. டாலரின் மதிப்பு உயர்வதாகவே நான் பார்க்கிறேன்' என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இதனை கிண்டலடிக்கும் விதமாக நடிகை வினோதினி வீடியோ பதிவிட்டுள்ளார்.

வெங்காய தோசை

வெங்காய தோசை

சாப்பிட்டு முடிச்சிட்டீங்களா என்ன சாப்டீங்க.. வெங்காய தோசையா? எங்க ஹோட்டல் வெங்காய தோசை பிரமாதமாக இருக்குமே.. எது பிரமாதமாக இல்லையா? குறை சொல்லப்போறீங்களா? குறை சொன்னா உள்ள தூக்கி போட நாங்க என்ன ஜனநாயக நாடா? ரெஸ்டாரெண்ட் தானே வைத்திருக்கோம். நீங்க குறைய சொன்னாதான் நாங்க திருத்திக்க முடியும்.

 தோசை பெருசாயிருச்சு

தோசை பெருசாயிருச்சு

சொல்லுங்க என்ன குறை இருக்கு? என்னது வெங்காய தோசையில் வெங்காயம் கம்மியா இருக்குதா? தோசை பெருசா இருந்தது நல்லா யோசிச்சு பாருங்க. அப்புறம் சாம்பார்ல கேரட்டை தேட வேண்டியிருந்ததா? ஆனா கேரட்ல சாம்பாரை தேட வேண்டியது இல்லைல்ல..எல்லாத்தையும் பாசிட்டிவா பாருங்க. வேறென்ன குறை? ஓ.. தேங்கா சட்னியில தேங்காய் ஊசி போய் இருந்ததா? தேங்காய் அப்படியேதான் இருந்தது.. நாள்தான் ஓடிப்போயிருச்சு.. அதுக்கு தேங்காய் என்ன பண்ண முடியும்? நீங்க ஏன் நெகடிவா யோசிக்கிறீங்க?

பில் எவ்ளோ

பில் எவ்ளோ

அந்த இரு கோடுகள் படத்தில சொல்வாங்கல்ல..சின்ன வரி பக்கத்தில பெரிய வரியை போட்டு பாருங்க அப்புறம் சின்ன வரி பத்தி கவலைப்பட மாட்டீங்க.. என்னது அது கோடா? கோடோ..ரோடோ.. நாங்க வரின்னுதான் சொல்வோம். பில்லை பே பண்ணுங்க? பில்லு எவ்ளோப்பா ஆச்சு..12ஆயிரத்து ஐநூத்தி சில்லறை.. இது கூட நீங்க 12 ஆயிரம் ரூபாயை லூஸ் பண்ணதா நினைக்காதீங்க.. ஒரு தோசையை கெயின் பண்ணதா நினைச்சுக்கங்க.

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி

நடிகை வினோதினி தனது முந்தைய வீடியாவில் சாப்பீட்டீங்களா வாங்க, எப்பா பில்லை போட, என்ன சாப்பீட்டீங்க, ரசம் சாதமா, ரசத்திற்கு ஜிஸ்டி, சாதத்திற்கு ஜிஎஸ்டி, ரசத்தில் ரசத்திற்கு நெய்க்கு ஜிஎஸ்டி, நெய்யில் கலந்த டால்டாவிற்கு ஜிஎஸ்டி, ரசத்திற்கு கடுகு தாளித்தோமே அதுக்கு ஜிஎஸ்டி போடுங்க. தாளித்த எண்ணெய்க்கு ஜிஎஸ்டி, எண்ணெய் ஊற்றப்பட்ட பாத்திரத்திற்கு ஜிஎஸ்டி, பாத்திரத்தை வைத்த ஸ்டவ்விற்கு ஜிஎஸ்டி, ஸ்டவ்விற்கு அடியில் இருக்கும் சிலிண்டருக்கு ஜிஎஸ்டி,போட்டு முடிச்சிட்டியா.

 விரலுக்கு ஜிஎஸ்டி

விரலுக்கு ஜிஎஸ்டி

சார் விரலை காட்டுங்கள் 1, 2, ,3 ,4 5, 6, 7, 8, 9, 10 .....ஆஹா சார் 10 விரல் வச்சிருக்காரு. 10 விரலுக்கும் 10 போடு. என்னாது இது உங்க விரல்லா, சாப்பிட யூஸ் செய்தீர்களே. என்னாது வலது கையை மட்டும் யூஸ் செய்தீர்களா, ஏன் இலையை அட்ஜஸ்ட் செய்ய இடது கையையும் தானே யூஸ் செய்திருப்பீர்கள். என்ன ஏமாற்ற பாக்குறீங்களா, அப்பறம் அந்த மூக்குக்கு ஜிஎஸ்டி போடு. உங்கள் சுகந்திரம் என்பது உங்களோட முடிஞ்சி போச்சி.ஆமா சாப்பாட்டை எடுத்து முகர்ந்து பார்த்தீர்களே, அதுக்கும் ஜிஎஸ்டி தான்.

கோடீஸ்வரன்

கோடீஸ்வரன்

அந்த மூச்சுக் காற்றுக்கு ஜிஎஸ்டி போடாம இருக்கோமேனு சந்தோஷப்படுங்க! பில் எவ்வளவு ஆச்சுரூ. 10,325.35 காசுகள்! ரவுண்டா ரூ.11 ஆயிரம் பில் போடுங்கள், அவங்க போட்ட ஜிஎஸ்டி, நாங்க போட வேண்டாமா, என்னாது காசு இல்லையா. போங்க சார் போய் கோடீஸ்வரனாய்ட்டு வாங்க, அப்பதான் வாழ முடியும். நீங்க கோடீஸ்வரனா பொறக்காதது உங்கள் தப்பு.என்னாது உழைத்து கோடீஸ்வரனாக போறீங்களா அப்பாவி உன் கிட்ட போய் பேசின பாரு போ வேலையை பாரு.3 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கிறேன் 30 நாளைக்கு போய் முக்கி முக்கி வேலையை பாரு என நடிகை வினோதினி ஜிஎஸ்டிக்கு எதிராக பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ வைரலானது. இந்த நிலையில் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+