தீவிரமான நிசார்கா புயல்.. தமிழகத்திற்கு இன்று காத்திருக்கும் மழை.. எங்கெல்லாம் பெய்யும்?
சென்னை: நிசார்கா புயல் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று நல்ல மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
நிசார்கா புயல் இன்று கரையை கடக்கிறது. அரபிக் கடல் அருகே உருவான இந்த புயல் தற்போது மகாராஷ்டிராவின் மும்பையில் இருந்து 180 கிமீ தொலைவில் உள்ளது. இன்று மதியம் 3 மணிக்குள் புயல் கரையை கடக்கும்.
தற்போது இந்த புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளது. இந்த புயலை எதிர்கொள்ளும் வகையில் தீவிரமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது .

ஆம்பன் புயல்
ஆம்பன் புயலை போலவே நிசார்கா புயலும் தமிழகத்தை தாக்கவில்லை. இந்த புயல் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய இரண்டு மாநிலங்களை தாக்குகிறது. மும்பை அருகே இந்த புயல் கரையை கடக்கிறது. இதனால் அங்கு கடுமையான கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. அதேபோல் குஜராத்திலும் கடலோர பகுதிகளில் இதனால் பெரிய அளவில் சேதங்கள் ஏற்படும்.

கேரளா நிலை
இன்னொரு பக்கம் நிசார்கா புயல் காரணமாக கேரளாவிலும், கர்நாடகாவிலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இரண்டு மாநிலங்களிலும் அரபிக் கடலோரம் இருக்கும் பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் ஏற்கனவே கொல்லம் உள்ளிட்ட மாவட்டங்களில் இதனால் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு எங்கே
நிசார்கா புயல் காரணமாக தமிழகத்தில் பெரிய அளவில் மழை இருக்காது என்றாலும் சில மாவட்டங்களில் மட்டும் நல்ல மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கேரளாவை ஒட்டிய மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலை அருகே வேகமாக காற்று வீசும் என்பதால் அங்கு மழை மேகங்கள் சூழ்ந்து அதிக அளவில் மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

கோவை மாவட்டம்
கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். இன்று மதியம் அதிக காற்றுடன் இந்த பகுதிகளில் மழை பெய்யும். கன்னியாக்குமரியில் கடல் பகுதியில் காற்று வேகமாக வீசும். கேரளா அருகே மீன் பிடிப்பது பாதுகாப்பானது கிடையாது. சென்னையில் மாலைக்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications