நிவர் சோகம் தீர்க்க வேஷ்டியை மடித்துக்கட்டி களமிறங்கிய அமைச்சர்... பாராட்டிய முதல்வர்
வீடுகளை இழந்தோர், உணவில்லாமல் தவிப்போர், தத்தளிக்கும் மீனவர்கள், ஆதரவில்லாத முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் களத்தில் நிற்கிறார் மூத்த அமைச்சர் ஒருவர்.
சென்னை: நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை தொடர்ந்து செய்து வரும் அமைச்சர் ஜெயக்குமாரை ஸ்பெஷலாக பாராட்டியுள்ள முதல்வர் பழனிச்சாமி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அனைவரும் அறியும் வகையில் வாழ்த்து கூறியுள்ளார்.
நிவர் புயலின் தாக்கத்தால் சென்னையில் இடைவிடாது பெய்து வரும் மழை ஒருபக்கம்,பலத்த காற்று ஒரு பக்கம், முழு கொள்ளளவை எட்டியதால் திறக்கப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி நீர் ஒருபக்கம் என சென்னைவாசிகளை பல முனைகளிலும் நின்று தாக்குகிறது இயற்கை.

இந்த சூழலில் வீடுகளை இழந்தோர், உணவில்லாமல் தவிப்போர், தத்தளிக்கும் மீனவர்கள், ஆதரவில்லாத முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் களத்தில் நிற்கிறார் மூத்த அமைச்சர் ஒருவர்.
தன் சொந்தப் பணத்தைக் கொண்டு பல்வேறு உதவிகளை இரண்டு நாட்களாக செய்து வருகிறார் அவர். வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ரெயின் கோட் அணிந்து தண்ணீர் சூழ்ந்த பல்வேறு பகுதிகளுக்கும் நேரடியாக சென்று குறைகளை கேட்பதும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பத்திரமாக முகாம்களுக்கு அனுப்பி வைப்பதும், உணவு சமைத்து தானே விநியோகம் செய்வதும் அத்தியாவசிய பொருட்களை அள்ளிக் கொடுப்பதும் இந்த அமைச்சரின் வாடிக்கையான விஷயமாக மாறியிருக்கிறது.

காரில் வலம் வந்து வேடிக்கை பார்ப்பவர்களுக்கு மத்தியில் மக்கள் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக அழைத்து அதற்கு தீர்வு காண்பது என பல தளங்களில்,களங்களில் நின்று பணியாற்றி வருகிறார் அந்த அமைச்சர். அவரது உதவும் மனப்பான்மை முதலமைச்சரின் பார்வைக்கு எப்படியோ சென்றிருக்கிறது.
நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை தொடர்ந்து செய்து வரும் மாண்புமிகு அமைச்சர் திரு.ஜெயக்குமார் அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் pic.twitter.com/feIPNcpF60
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) November 26, 2020
இதையடுத்து உடனடியாக அந்த அமைச்சரை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டு தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. அந்த அமைச்சர் யார் என்பது தானே உங்கள் அனைவரது கேள்வியாக இருக்கிறது? வேறுயாருமல்ல எப்போதும் மக்களோடு மக்களாகவே பயணிக்கும் அமைச்சர் ஜெயக்குமார் தான் அவர்.
தனிப்பட்ட முறையில் வாழ்த்து சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் இவரது செயலை பலரும் அறிய வேண்டும் என்பதற்காக பொதுவெளியில் அதாவது முதல்வரின் ட்விட்டர் பக்கத்திலும் வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் பழனிச்சாமி.

நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை தொடர்ந்து செய்து வரும் மாண்புமிகு அமைச்சர் திரு.ஜெயக்குமார் அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
புயல் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரவு பகல் பாராது களப்பணியாற்றிய அமைச்சர்கள், அரசு ஊழியர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், மாவட்ட ஆட்சிகளுக்கும் உடனுக்குடன் நன்றி கூறி பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உற்சாகப்படுத்தி வருகிறார் முதல்வர் பழனிச்சாமி.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications