வருமான வரி சோதனை..பல கோடி பணம் கைப்பற்றப்பட்டதாக வெளியான தகவல் பொய்.. ஜி ஸ்கொயர்
சென்னை: வருமான வரித்துறை சோதனையின்போது, மூன்றரை கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக வெளியான தகவல் முற்றிலும் ஆதாரமற்றது என ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. காழ்ப்புணர்ச்சி காரணமாக தங்கள் மீது தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்பது வருமான வரித்துறை சோதனை மூலம் தெளிவாகி உள்ளதாக ஜி ஸ்கொயர் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜி ஸ்கொயர் நிறுவனம் ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் ஜி ஸ்கொயருக்கு சொந்தமாக பிளாட்கள் உள்ளன. பல ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் ஜி ஸ்கொயருக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த ஒரு வாரமாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில், இந்த சோதனை தொடர்பாக விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஜி ஸ்கொயர் நிறுவனம், வருமானவரி சட்டங்கள் மற்றும் விதிகள் முறையாக பின்பற்றப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்துவதற்கான வழக்கமான சோதனைதான் இது என்று தெரிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு ரியல் எஸ்டேட் நிறுவனங்களிலும் இதேபோன்ற சோதனை நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. வருமான வரித்துறையின் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் ஜி ஸ்கொயர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சோதனையின்போது, தாங்கள் அளித்த ஆவணங்கள் மூலம், தங்களுக்கு எந்தவொரு அரசியல் கட்சியுடனோ, அரசியல் கட்சியைச் சேர்ந்த குடும்ப உறுப்பினருக்கோ தங்களுடன் தொடர்பு இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.
தங்களது நிறுவனத்துக்கு 38 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருப்பது உள்ளிட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் ஜி ஸ்கொயர் நிறுவனம் தெரிவித்துள்ளது. சோதனையின்போது, மூன்றரை கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக வெளியான தகவல் முற்றிலும் ஆதாரமற்றது மற்றும் தவறானது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
-
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
2 சீட்டு தானே என்று ஏளனம் செய்தார்கள்.. 24 மணி நேரத்தில் வலிமை தெரிந்திருக்கும்.. திருமாவளவன் -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
ஜூலையில் அரசியல் களம் சூடுபிடிக்கும்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அண்ணாமலை!












Click it and Unblock the Notifications