"நயன் - விக்கி எந்த விளக்கமும் வழங்கவில்லை" வாடகைத்தாய் விவகாரத்தில் இறுகும் சுகாதாரத்துறையின் பிடி!
சென்னை: நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி தரப்பில் இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை என்று சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த ஜூன் 9ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதற்கு பிறகு இருவரும் தங்களுடைய படப் பணிகளில் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் வாடகை தாய் மூலமாக இந்த நட்சத்திர ஜோடிக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. கடந்த 9ம் தேதி அந்த குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

விசாரணைக் குழு
இதனைத் தொடர்ந்து வாடகைதாய் குறித்து பல கேள்விகளும் சர்ச்சைகளும் தொடர்ந்து வந்துக்கொண்டிருந்தது. இந்த தம்பதியினர் சட்டத்தை முறையாக பின்பற்றி வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றுக் கொண்டார்களா என்ற விவாதம் எழுந்தது. தொடர்ந்து வாடகை தாய் விவகாரம் குறித்து விசாரிக்க சுகாதார இணை இயக்குநர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.

6 ஆண்டுகளுக்கு முன் திருமணம்?
இதனிடையே கடந்த டிசம்பர் மாதமே வாடகைத் தாய் முறையில் குழந்தை பெறும் ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டிருந்ததாக விசாரணை குழுவிடம் விக்னேஷ் சிவன் - நயன் தாரா தம்பதி ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியது. மேலும், 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்ததிற்கும் அவர்கள் ஆதாரங்களை சமர்ப்பித்ததாகவும் கூறப்பட்டது.

தனித்தனியாக விசாரணை
இந்த நிலையில் சுகாதாரத்துறை தரப்பில் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் திருமணம் செய்தது குறித்து பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோரை தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை தகவல்
அதேபோல் இதுவரை விக்னேஷ் சிவன் - நயன்தாரா தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. வாடகைத்தாய் பற்றி ஆவணங்களை வழங்குமாறு விக்கி - நயன் தம்பதிக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து, வாடகைத்தாய் ஆவணங்களை ஆய்வு செய்த பின்னரே, இருவரிடமும் விசாரணை என்றும் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications