டிசி கேட்டால் ஃபீஸ் கேட்கும் தனியார் பள்ளிகள்.. டிசியே வேண்டாம்.. வந்தா மட்டும் போதும்.. தமிழக அரசு
சென்னை: அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது 8-ஆம் வகுப்பு வரை மாற்றுச் சான்று இல்லாமல் வயதுக்கு ஏற்ற வகுப்புகளில் சேர்ந்து கொள்ளலாம் என பள்ளிக் கல்வித துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை கடந்த 14 -ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
கொரோனா தொற்றின் காரணமாக பொதுமக்களிடம் ஒரு வித பாதுகாப்பு உணர்வு இருந்து வருகிறது. அதனால் தனியார் பள்ளிகளில் படித்து வரும் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

தனியார் பள்ளிகள்
மாற்றுச் சான்று வழங்க தனியார் தனியார் பள்ளிகள் மறுக்கின்றன. மேலும் கடந்த ஆண்டுக்கான கட்டணத்தை செலுத்துவோருக்கு மட்டுமே மாற்றுச் சான்று வழங்கப்படும் என அறிவித்துவிட்டன. கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கடந்த ஆண்டு கட்டணத்தையும் கட்ட முடியாமலும் டிசி வாங்க முடியாமலும் அல்லல்படுகிறார்கள்.

மாணவர்கள்
இந்த நிலையில் தனியார் பள்ளிகளில் இருந்து வரும் மாணவர்கள் மாற்றுச் சான்று இல்லாமல் அரசுப் பள்ளிகளில் சேர்க்கின்றனர் என்ற குற்றச்சாட்டை தனியார் பள்ளி நிர்வாகிகள் கூறி வருகிறார்கள். இதுகுறித்து பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் கூறுகையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளிகளில் இறுதி வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கும் அந்த பள்ளிகளிலிருந்து வேறு பள்ளிக்கு மாற விரும்பு மாணவர்களுக்கும் மாற்றுச் சான்று கொடுப்பதற்கான அனைத்து விவரங்களையும் கல்வித் தகவல் மேலாண்மை இணையத்தில் அந்த மாணவர்கள் குறித்த விவரங்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

தனியார் பள்ளிகள்
அதிலிருந்து மாணவர்களின் மாற்றுச் சான்றை கேட்கும் போது பதிவிறக்கம் செய்து கொடுக்க வேண்டும். கட்டாய கல்வி சட்டத்தின்படி அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்படுவதால் தனியார் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மாற்றுச் சான்று இல்லாமலேயே அரசுப் பள்ளிகளில் அவர்கள் படிக்க வேண்டிய வகுப்பில் சேர்ந்து கொள்ளலாம்.

ஆதார் எண்
மாணவர் சேர்க்கையின்போது ஆதார் எண்ணை மட்டும் குறிப்பிட்டால் போதும். கல்வி மேலாண்மை தகவல் முகமையில் அந்த எண்ணை பயன்படுத்தி பெற்றுக் கொள்ள முடியும். தனியார் பள்ளிகளில் இருந்து வெளியேறும் மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்த்துவிட்டு, அவர்களின் மாற்றுச் சான்றிதழை அனுப்ப அந்த பள்ளிக்கு கல்வித் தகவல் மேலாண்மை முறைமையின் மூலம வேண்டுகோள் விடுக்கலாம். எனவே அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு வரை மாணவர்களை சேர்க்க மாற்றுச் சான்று ஏதும தேவையில்லை என்றார் ஆணையர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications