பாமக வேண்டாம்.. ஒதுக்கி வைக்கும் தவெக.. திடீரென ரூட்டை மாற்றிய முதல்வர் விஜய்! பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் விஜய்யின் தவெக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது பாமகவை கூட்டணியில் சேர்க்கும் முடிவை முதல்வர் விஜய் தள்ளிவைத்துள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் ஆட்சியை நடத்த தேவையான எம்எல்ஏக்களின் பலத்தை முதல்வர் விஜய் சட்டசபையில் வைத்துள்ளார். இருப்பினும் தவெகவிற்கு தனி மெஜாரிட்டி இல்லை. கூட்டணி கட்சிகளின் பலத்தில் தான் ஆட்சியை நடத்த வேண்டிய சூழல் உள்ளது.

tvk pmk vijay anbumani ramadoss

தவெகவிற்கு 2 கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து தவெகவிற்கு ஆதரவு கொடுத்த நிலையில் மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை இடைத்தேர்ல்களில் இருகட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தின. இது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் எதிர்காலத்தில் பிற கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? விஜய்யுடன் தொடர்பு பயணிப்பார்களா? இல்லையா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதனால் தவெக பாமகவையும் அரவணைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

கடந்த 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இருந்தது. ஆனால் மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத்தேரதலில் பாமக, அதிமுக உள்பட எந்த கட்சிக்கும் ஆதரவு வழங்கவில்லை. ஏற்கனவே பாமகவுடன், தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் என்ற தகவல்கள் வெளியான நிலையில் பாமகவின் இந்த முடிவு அதிக கவனம் பெற்றது. இடைத்தேர்தலுக்கு பிறகு தவெக கூட்டணியில் பாமக இணையலாம் என்று சொல்லப்பட்டது.

பாமகவிற்கு தற்போது 4 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் அவர்களை தங்கள் பக்கம் வைத்து கொண்டால் ஆட்சிக்கு சிக்கல் வராது என்று தவெக நினைக்கிறது. ஆனால் பாமக கூட்டணிக்குள் வருவதை விசிக விரும்பவில்லை. பாமக கூட்டணிக்குள் வந்தால் நாங்கள் வெளியேறுவோம் என்று விசிக அமைச்சர் வன்னியரசு வெளிப்படையாகவே அறிவித்தார். இந்நிலையில் தான் தற்போது பாமகவை கூட்டணி சேர்க்கும் முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுபற்றி தவெக நிர்வாகிகள் கூறுகையில், ''தற்போது சட்டசபையில் தவெகவிற்கு பெரும்பான்மை உள்ளது. இதனால் பெரும்பான்மை பற்றிய கவலை தற்போது இல்லை. விசிகவுடன் தற்போது தவெக கூட்டணி அமைத்துள்ளது. தவெகவிற்கு மெஜாரிட்டி இல்லை என்றதும் விசிக வந்து ஆதரவு தந்தது.

இப்போது பாமகவை சேர்ப்பதால் எங்கள் கூட்டணியில்குழப்பம் ஏற்படும். அதுமட்டுமின்றி அரசிலும் குழப்பம் ஏற்படும். இதனால் முதல்வர் விஜய் தற்போது புதிய கட்சிகளை கூட்டணியில் இணைப்பதை விட சட்டசபையில் தவெக எம்எல்ஏக்களின் பலத்தை அதிகரிக்க முன்னுரிமை அளித்து வருகிறார்.

அதிமுக எம்எல்ஏக்கள் கட்சி தாவும் நடவடிக்கையில் உறுதியாக உள்ளனர். இதனால் அவர்களை வைத்து இடைத்தேர்தலை சந்தித்து சட்டசபையில் மெஜாரிட்டியை பெற முடியும் என்பதில் கட்சி தலைமை உறுதியாக உள்ளது.

அதிமுகவில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து வந்த 2 பேர் மீண்டும் தவெகவில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இதனால் தவெகவின் பலன் சட்டசபையில் 107 ல் இருந்து 109 ஆக அதிகரித்துள்ளது. விரைவில் பெருந்துரை, அம்பை, விராலிமலை, கரூர் சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அங்கும் தவெக வெல்லும் என்று நம்புகிறோம்.

அதுமட்டுமின்றி அதிமுகவின் அதிருப்தி அணியினர் எங்களுக்கு ஆதரவு அளிக்கவும் வாய்ப்புள்ளது. அதோடு அவர்களில் சிலர் பதவி விலகி தவெகவில் இணைய தயாராக உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இப்போதைக்கு பாமகவை கூட்டணிக்குள் சேர்த்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று தவெக தலைமை கருதுகிறது'' என கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+